கோழிப்பண்ணையின் வடிவமைப்பு எப்படி இருக்கணும்?

How do you have a poultry design?



கோழிப்பண்ணையின் வடிவமைப்பு

ஒரே கொட்டகை மட்டுமே இருப்பதால் ஒரு சிறிய கோழிப்பண்ணைக்கென தனியான வடிவமைப்புகள் தேவைப்படாது. நடுத்தர மற்றும் பெரிய பண்ணைகளுக்கு பண்ணை வீடுகளை அமைப்பதில் சரியான வடிவமைப்பு தேவை. இதில் கடைபிடிக்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்களாவன.

பார்வையாளர்களையும், வெளியிலிருந்து வரும் வாகனங்களையும் கோழிகளுக்கு அருகில் அனுமதிக்காதவாறு பண்ணைகள் வடிவமைக்கப்படவேண்டும்.

தூய காற்று குஞ்சுக்கொட்டகையில் முதலில் நுழைந்து, பிறகு வளரும் கோழிக்கொட்டகையில் சென்று கடைசியாக முட்டைக்கோழி கொட்டகைக்குள் செல்லுமாறு கோழிப்பண்ணைக் கொட்டகைகள் வடிவமைக்கப்படவேண்டும். இதனால் முட்டைக்கோழிகளிடமிருந்து குஞ்சுக்கோழிகளுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.

குஞ்சுக்கோழிக் கொட்டகைக்கும், வளரும் கோழிக்கொட்டகைக்கும் இடையில் குறைந்தது 50-100 அடி இடைவெளியும், வளரும் கோழிக் கொட்டகைக்கும் முட்டைக் கோழிக் கொட்டகைக்கும் இடையில் 100 மீட்டர் இடைவெளியும் இருக்கவேண்டும்.

முட்டை சேமிக்கும் அறை, அலுவலகம், தீவனம் சேமிக்கும் அறை போன்றவை பண்ணையில் நுழைவு வாயிலிலேயே அமைக்கப்படுவதால், கோழிப்பண்ணைகளைச் சுற்றி ஆட்கள் நடமாடுவதைத் தவிர்க்கலாம்.

இறந்த கோழிகளைப் புதைக்கும்குழி, மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளைப் பராமரிக்கும் அறை போன்றவை பண்ணையின் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.

click me!