எவ்வகை பசுந்தாள் உரப் பயிர்கள் மண் வளத்தைக் காக்கும்?

 |  First Published Jun 10, 2017, 1:07 PM IST
How do green manure fertilizers protect soil fertility



மண் வளம்:

தமிழ்நாடு மண் வகைகளில் கரிமப்பொருட்களின் அளவும், தளைச்சத்தின் அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு பசுந்தாள் உரமிட்டால் தழைச்சத்தை அதிகரிக்கலாம். இரசாயன உரங்களின் விளைவால் மண்ணில் ஏற்படுத்துகின்ற மாற்றங்களை சீராக்க பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி முக்கியத்துவம் பெறுகிறது.

Latest Videos

undefined

பசுந்தாள் உரங்கள்:

பருவமழை மற்றும் நீர்ப்பாசன வசதிகளைக்கொண்டு நல்ல பசுந்தாள் எருப்பயிர்களைப் பயிர் செய்து சம்பா நெல்லிற்கு எருவாக பயன்படுத்தவேண்டும்.

குறைந்த வயதில் அதிக தழைச்சத்தை தரவல்ல வறட்சி தாங்கும் தன்மையுடைய உரப்பயிர்களுக்கான தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி மற்றும் கொளுஞ்சி ஆகியவற்றை மண்ணின் தன்மை, நீர் பாசன வளர்ச்சிக்கு ஏற்ப பயிரிட்டு 30-35 நாட்களில் மண்ணில் மடக்கி உழலாம்.

பசுந்தாள் எருவுடன் இரசாயன எருக்களை சரியான பங்கில் ஒருங்கிணைந்தால் சம்பா பயிரின் விளைச்சலை அதிகரிப்பதுடன் நெல்லின் தரத்தையும் அதிகரித்து அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது.

பசுந்தாள் பயிர்கள்

பசுந்தாளுரப்பயிர்கள் இரண்டுவகைப்படும். ஒன்று பயறுவகைச்செடிகள், மற்றொன்று பயறுவகை மரம் மணிலா அகத்தி, தக்கைப்பூண்டு, சணப்பை, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறுவகைச்செடி இனத்தையும் அகத்தி கிளரிசிடியா, சூபா புல் போன்றவை பயிர்வகை மர இனத்தையும் சார்ந்தவை.

இவை மட்டுமில்லாமல் தானாக வளரும் கொளுஞ்சி, ஆவாரை, எருக்கு போன்ற செடிகளும் பசுந்தாளுரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தக்கைப்பூண்டு:

தக்கைப்புண்டு மிகவும் வேகமாக வளர்ந்து குறுகிய நாட்களில் [40-45 நாட்களில்] ஏக்கருக்கு சராசரியாக 10 டன்கள் வரை பசுந்தழை விளைச்சலைத்தரவல்லது. தண்ணீர் தேக்கத்தையும், வறட்சியையும் ஓரளவு தாங்கி வளரக்கூடியது. 1 ஏக்கருக்கு பசுந்தாளுரப்பயிராக சாகுபடி செய்ய 15 கிலோ விதை தேவைப்படும். இது களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற ஒரு முக்கிய பசுந்தாளுரப்பயிராகும்.

மணிலா அகத்தி:

செஸ்பேனியா ரொஸ்ட்ரெட்டா எனப்படும் மணிலா அகத்தி பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1985 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மணிலா அகத்தி தண்டுபாகத்திலும், வேர் முடிச்சுகளை கொண்டுள்ளது.

நீர் தேங்கிய நெல் பயிரிடும் நஞ்சை நிலங்களில் நன்றாக வளர்ந்து காற்றிலுள்ள தழைச்சத்தினை கிரகித்து தனது தண்டு மற்றும் வேர் பகுதிகளில் உள்ள வேர் முடிச்சுகளில் சேமித்து வைக்கும் திறனுடையது. 60 நாட்களில் 1 ஏக்கருக்கு 10 லிருந்து 12 டன்கள் வரை தழைச்சத்தை கொடுப்பதன் மூலம் 40-50 கிலோ தழைச்சத்தை கொடுக்கவல்லது.

சணப்பை:

இப்பசுந்தாள் உரப்பயிர் தோட்டக்கால் நிலங்களுக்கு ஏற்றதாகும். நிழலான இடங்களிலும் வளரும் தன்மையுடையதால் தென்னையில் ஊடுபயிராக இப்பசுந்தாள் உரப் பயிரை சாகுபடி செய்து மடக்கி உழுது பசுந்தாள் உரமாக இடலாம்.

நடவு வாழயில் பசுந்தாள் உரப்பயிராக சாகுபடிச் செய்ய ஏற்றது. இப்பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் நூற்புழுவின் தாக்குதல் குறைவாக இருக்கும். இப்பயிரை 40 நாட்கள் அல்லது பூக்கும் பருஅத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும்.

கொளுஞ்சி:

மணற்பாங்கான நிலங்களில் இதன் வளர்ச்சி நன்கு காணப்படுகிறது. வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. ஒரு முறை விதைத்தால் வளர்ந்த பயிரிலிருந்து சிதறும் விதைகள் அடுத்தடுத்த பருவங்களில் தொடர்ந்து முளைக்கும் திறன் பெற்றது.

மாடு மேயாததால் இதனைக் கோடைப்பருவத்தில் வயலில் வளர்ப்பது எளிது. இதன் வளர்ச்சி வேகம் குறைவாக இருப்பினும் நீண்ட நாட்களுக்கு [100 நாட்கள் வரை பசுமையாக இருந்து அஹ்திக தழைச்சத்தை தரும் இயல்புடையது.

click me!