காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஒரே மூலிகை பூச்சிவிரட்டி…

 |  First Published Jan 13, 2017, 1:08 PM IST

வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி உள்ளது.

நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25-ம் நாள், 45-ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும்.

Tap to resize

Latest Videos

காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ தூவினால் போதும். வீட்டுத்தோட்டங்கள், சிறிய செடிகள், பூந்தொட்டிகளுக்கு ஒரு கைபிடி (75-100 கிராம்) இலைப்பகுதி மற்றும் தண்டுப்பகுதிகளில் தூவலாம். பெரிய கொடிகள், மரங்களுக்கு 250 கிராம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

மேலும் வீட்டு கழிப்பறை, குளியலறை, சமையல் அறைகளில் பூச்சியைக் கட்டுப்படுத்த இரவு 250 கிராம் தூவிவிட்டு காலையில் கழுவிவிட்டால் போதும்.

click me!