விதையை காய வைப்பதன் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்…

 |  First Published Apr 4, 2017, 12:12 PM IST
Get to know the importance of keeping the seeds dry ...



1.. விதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும்வரை காயவைப்பது ஆகும்.

2.. ஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், சேமிக்க பயன்படுத்தப்படும் பைகளைப் பொறுத்து பாதுகாப்பான ஈரப்பதம் வேறுபடும்.

Tap to resize

Latest Videos

3.. விதையை காயவைப்பது விதையினை உயிருடனும் நல்ல வீரியமுடனும் சேமிக்க முக்கிய காரணமாகும். இல்லையெனில் சீக்கிரமே பூஞ்சானங்களாலும், வெப்பத்தினாலும் மற்றும் அதிக நுண்ணுயிர் தாக்குதலாலும் கெடுகிறது.

விதைகளை காய வைக்கும் இரண்டு முறைகள்:

1.. சூரிய ஒளியில் நல்ல சிமிண்ட் தளத்தில் காயவைப்பது,

2.. இயந்திரங்கள் மூலம் சுடுகாற்றை விதை கலங்களில் அனுப்பி காயவைப்பது.

எப்படி காயவைப்பது?

** விதையை அறுவடை முடிந்த உடன் காயவைத்து பாதுகாப்பான ஈரப்பதத்திற்கு கொண்டுவந்து சேமிக்க வேண்டும்.

** ஒன்று அல்லது இரண்டு மாதம் கழித்து காயவைக்கும் போது அறுவடை சூட்டுடன் மூடையிட்டதால் விதைகள் கெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும்.

** நிறம் மங்கி இருக்கும், முளைப்புத்திறன் குறைந்திருக்கும். பொதுவாக விவசாயிகள் சூரிய ஒளியில்தான் விதைகளை காயவைக்கிறார்கள்.

விதைகளை காயவைக்கும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1.. ஈரமான அழுக்கான மண்களத்தில் போடக்கூடாது.

2.. களத்தில் ஒரே வயலில் இருந்து பெறப்பட்ட ஒரே பயிர் ஒரே ரகத்தைதான் ஒரு நேரத்தில் கையாள வேண்டும்.

3.. உச்சி வெயிலில் விதைகளைகாய போடகூடாது. அந்த நேரத்தில் விதைகளை குவித்து தார்பாய் போட்டு மூடிவைக்க வேண்டும்.உச்சி வெயிலில் உள்ள புற ஊதா கதிர்கள் முளைப்புதிறனை பாதிக்கும்.

4.. விதைகளை அதிகமாக காயவைக்கக் கூடாது.விதை மணிகளில் வெடிப்பு ஏற்பட்டு கருசிதைவு ஆகி முளைப்புதிறன் பாதிக்கும்.

click me!