பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு உணவுப் பொருளில் இருக்கு; அதுவும் 50% மேல…

 |  First Published Feb 11, 2017, 12:57 PM IST



இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலாக உணவுப் பொருள்களில் பூச்சி கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு காணப்படுகிறது;

இதற்குத் தீர்வாக சுற்றுச்சூழல் மாசுபாடு, மனிதனுக்கு தீங்கில்லாத நுண்ணுயிர் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தலாம் என வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை, நுண்ணுயிர் பூச்சி கட்டுப்பாட்டில் முன்னோடியாக விளங்குகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதிக அளவில் சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நுண்ணுயிர் நோய்க் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா ஆகியவற்றின் நடப்பு ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் தயாரித்தல், அதனை பயன்படுத்துதல் ஆகியவற்றில் இப் பல்கலைக்கழகம் இருபது ஆண்டுகளாக மிகச் சிறந்து விளங்குகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட பூச்சிகொல்லிகள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதன் மொத்த உற்பத்தி 85,000 டன்கள் ஆகும். 

இந்தியாவில் பூச்சிகொல்லி பயன்பாடு 76 சதவீதம் என்ற நிலையிலும், இது உலக அளவில் 44 சதவீதமாகும்.

உலகளவில் சராசாரியாக ஹெக்டருக்கு 500 கிராம் என்ற அளவில் பூச்சிகொல்லிகள் உபயோகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் 350 கிராம் என்ற அளவில்தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் 51 சதவீத உணவுப் பொருள்களில் பூச்சிகொல்லிகளின் எஞ்சிய நஞ்சு காணப்படுகிறது.

இதில் 20 சதவீத உணவுப் பண்டகங்களில் அனுமதிக்கப்பட்ட  அளவினை விட அதிகமாக பூச்சிகொல்லிகளின் எச்சம் காணப்படுகிறது.

சுற்றுப்புற சூழல் மாசுபடாமலும், மனித ஆற்றலுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்க ரசாயன பூச்சிகொல்லிகள் அல்லாது மாற்று முறையில் நோய் மேலாண்மையில் நுண்ணுயிர் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தலாம்.

2000 ஆம் ஆண்டில் உயிர் பூச்சிகொல்லிகளின் பங்கு 0.2 சதவீதமாக இருந்தது. இதுவே 2005 ஆம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்ந்தது. மேலும் 2013 ஆம் ஆண்டில் 5 சதவீத பங்கினையும், 1 மில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பையும் அடைந்தது. தற்போது, இதன் மதிப்பு பல மில்லையங்களை தொட்டுள்ளது.
அடுத்து ஐந்து ஆண்டுகளில் நுண்ணுயிர் பூச்சிகொல்லிகளின் பயன்பாட்டு விகிதம் ஆண்டுக்கு 40 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை வேளாண்மை பொருள்களின் விழிப்புணர்வு காரணமாக அதன் பயன்பாடும் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. புதிய செயற்கை பூச்சிகொல்லிகளின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் இந்தியாவில் தனியார் தொழில் துறை நிறுவனங்கள் இயற்கை பூச்சிகொல்லிகளின் உற்பத்தியில் முக்கியத்துவம் காட்டி வருகின்றன.

1977 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிர் பூச்சிகொல்லியின் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு, அதற்கான தனி ஆய்வுக்கூடம் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் பல ஆராய்ச்சித் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேம்பு மூலம் உருவாக்கப்பட்ட 0.33 சதவீத அசாடிராகடின் பூச்சிகொல்லிகள் உபயோகத்தை முறைப்படுத்தி உள்ளது. 

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் நோய்கள் மேலாண்மையில் டிரைகோடெர்மா விரிடி (டிவி1), சூடோமோனாஸ் புளோரசன்ஸ் (டிஎன்ஏயூ – பிஎப் 1) வீரியம் வாய்ந்ததாக உள்ளது.

இதைத் தொடர்ந்து பேசில்லஸ், கீடோமியம், ஈஸ்ட், மெட்டாரைசியம் மற்றும் பிவேரியா போன்ற நுண்ணுயிர்களைக் கொண்டு உயிர் பூச்சிகொல்லிகள் உருவாக்குவதில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சொட்டு நீர் பாசனம் வழியாக சூடோமோனாஸ் இடுவதற்கு பிஎப்1 நீர்க் கரைசல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை நுண்ணுயிர் பூச்சி கட்டுப்பாட்டில் முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதிக அளவில் சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது என்றனர்.

இயற்கை வேளாண்மை பொருள்களின் விழிப்புணர்வு காரணமாக அதன் பயன்பாடும் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. புதிய செயற்கை பூச்சிகொல்லிகளின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் இந்தியாவில் தனியார் தொழில் துறை நிறுவனங்கள் இயற்கை பூச்சிகொல்லிகளின் உற்பத்தியில் முக்கியத்துவம் காட்டி வருகின்றன.
 

click me!