உலகின் பல்வேறு நாடுகளில் காணப்படும் பறவைக்காய்ச்சல் நோய் இந்தியாவிலும் வெகுவாக பரவி உள்ளது.
தமிழகத்தில் அவ்வளவாக பறவைக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை. எனினும் இந்நோய் கோழிகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருக்க இந்த சுகாதார வழிமுறைகளை கோழி வளர்ப்போர் பின்பற்றலாம்.
சுகாதார வழிமுறைகள்:
1.. வீட்டில் வளர்க்கும் கோழிகள் வீட்டு எல்லையை விட்டு வெளியில் சென்று மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் வெளியில் உள்ள கோழி, வாத்து, கொக்கு மற்றும் இதர வனப்பறவைகளை உங்கள் வீட்டு எல்லைக்குள் நுழைந்து கோழிகளின் அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2.. உங்கள் கோழிகளின் தீவனம், தண்ணீர் வேறு கோழிகள் அல்லது பறவைகள் பங்கிட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3.. தீவனம், தண்ணீர் கொடுத்து விட்டு தட்டுக்களை வெளியே வைத்தல் கூடாது.
4.. கோழி, வாத்து, வான்கோழி, கூஸ் வாத்து போன்ற பல்வேறு பறவைகளை ஒன்றாக வளர்த்தல் கூடாது.
5.. வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் பறவைகள், சரணாலயங்களாக அருகில் கோழி அல்லது வாத்து கண்டிப்பாக வளர்க்கக்கூடாது. நாடு விட்டு நாடு செல்லும் பறவைகள் தான் பறவைக்காய்ச்சல் நோயை பரப்புகின்றன.
6.. சந்தையில் வாங்காமல் அரசுப் பண்ணைகளில் இருந்து கோழிக்குஞ்சுகளை வாங்கலாம்.
7.. கோழி எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாட விடக்கூடாது. கோழிக்கூண்டு சுத்தம் செய்யும்போது மூக்கின் மீது துமி கட்டி கொள்ளவும்.
8.. கோழி அல்லது கோழி இறைச்சி கையாளும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.