கோழிப் பண்ணைகளில் உரம்
கோழிப்பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவில் 3.30 மில்லியன் டன் கோழிக் கழிவு ஒரு வருடத்திற்கு உற்பத்தியாகிறது.
undefined
கோழிவளர்ப்பு தொழில் நுட்பத்தின் மூலம் பல மாநிலங்களில் உள்ளூர் விவசாய பொருளாதாரம் உயருகிறது. கோழிப் பண்ணைத் தொழிலானது மிகவும் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்த போதிலும், இப்பண்ணைகளிலிருந்து வரும் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை பாதிப்படையச் செய்கின்றன.
விவசாயக் கண்ணோட்டத்தில் கோழிப் பண்ணைக் கழிவிலிருந்து வெளியேறும் நைட்ரேட் நைட்ரஜன் நிலத்தடி நீரை மாசு அடையச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. கோழிக் கழிவை முறையற்று சேமித்து வைப்பதன் மூலம் அவற்றிலுள்ள கனிம உலோகங்கள் நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.
கோழி எரு மக்கும் பொழுது வெளியாகும் அம்மோனியா சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எருவின் உர மதிப்பையும் குறைக்கிறது. ஏனென்றால் கோழிப்பண்ணைக் கழிவில் பொதுவாக தழைச்சத்து அதிகமாகவும், கரிமம் – தழைச்சத்தின் விகிதம் குறைவாகவும் உள்ளது.
கோழிப்பண்ணைக் கழிவில் 60% தழைச்சத்தானது யூரிக் அமிலம் மற்றும் யூரியாவாக உள்ளது. இது நீராற் பகுத்தல் மூலம் அம்மோனியாவாயுமாக மாறி வெளியேறுவதால் தழைச்சத்து இழப்பு ஏற்படுகிறது.
கோழி எருவில் இருந்து அம்மோனியா ஆவியாதலை பல்வேறு வழிகளில் குறைக்கலாம். கோழி எருவினை, அதிகக் கரிமப் பொருள் கலந்த அங்கக கழிவுப் பொருட்களுடன் மக்கச் செய்வதினால், அம்மோனியா ஆவியாதலை தற்காலிகமாக நிலைப்படுத்த முடியும். மேம்படுத்தப்பட்ட இந்த தொழில் நுட்பமானது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.