நோனிப்பழ சாகுபடி…

 |  First Published Oct 25, 2016, 4:30 AM IST



இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதி என புனையப்பட்டுள்ளதே தவிர, உண்மை நிலை அப்படியில்லை. இங்கு மா, கொய்யா, அன்னாசி, சப்போட்டா,சீத்தா, பப்பாளி, வாழை என ஏராளமான பழங்கள் விளைகின்றன. காரணம் மண் வளமானதாக இருப்பதே.

தண்ணீர், இயற்கை உரம், நல்ல பராமரிப்பு இருந்தால், ராமநாதபுரம் மண்ணில் வெளிநாட்டு பழங்களைக் கூட விளைவிக்க முடியும். இதற்கு உதாரணம், திருப்புல்லாணி அருகே நம்பியான் வலசை கிராமத்தில் விளைந்துள்ள “நோனி’ என்ற அபூர்வ வகை பழங்கள்.

Tap to resize

Latest Videos

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக”நோனி’ பழக்கன்றுகள் பயிரிடப்பட்டுள்ளது.

இதன் வேர், தென்னை மரத்தின் பக்கவாட்டு வேர்களில் இணைந்து அதற்கு தேவையான சத்துக்களை தருவதால், தென்னையின் வளர்ச்சியும் நன்றாக உள்ளது.

ஆறு வகை ருசி:

“நோனி’ பழத்தின் பூர்வீகம் ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் நாடுகள். இதன் கன்றுகள் நட்டு வைத்த 11 மாதத்தில் பலன் தரும். இதற்கு பஞ்சகவ்யம், இயற்கை உரங்கள் மட்டுமே தேவை. இப்பழத்தை முகர்ந்து பார்த்தால் துத்தநாகம் போன்று ஒருவித ரசாயன வாசனையுடன் இருக்கும். அதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு, காரம் ஆகிய சுவை உள்ளது. 5 வருடங்கள் வளர்ந்த செடியில் இருந்து பறிக்கப்படும் பழங்கள் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இப்பழங்களை பறித்த 5 மணி நேரத்திற்குள் பெரிய டிரம்களில் போட்டு, 22 நாட்கள் மூடி, இருட்டறையில் வைக்க வேண்டும்.

பின்னர் கலவை இயந்திரத்தில் போட்டு அரைத்து 3 முறை வடிகட்ட வேண்டும். களி மாதிரி வரும் இதனுடன் 14 நாட்களுக்கு பிறகு நெல்லிக்காய் பொடி சேர்த்தால் திரவ வடிவத்திற்கு மாறி விடும். அதைச் “சாறு எடுத்து, “டானிக்’ தயாரிக்கலாம்.

இந்த பழங்களை நன்கு காய வைத்து பொடியாக்கி, அதனுடன் “டிஸ்டிலரி வாட்டர்’, தேன், காளான் பவுடர், கடற்பாசி சேர்த்தும் உபயோகிக்கலாம்.

சத்துக்களும், பயன்களும்:

இந்த பழத்தில் வைட்டமின் – ஏ, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மஞ்சள் காமாலை, சிறுநீரக கோளாறுக்கு சிறந்த மருந்து.

மேலும், மூளைக்கு செல்லும் ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் உள்ள சளியை, மலத்துடன் வெளியேற்றி விடும்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

மாரடைப்புக்கு காரணமான ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை தடுத்து, உயிர் காக்கும் சிறந்த மாமருந்து. இதற்கு செம்மண் கலந்த மணல் பகுதியே ஏற்ற இடம்.

நடவு செய்யும்போது பெய்யும் சிறிதளவு மழையே போதும். அதன்பிறகு கடலோர உப்பு நீரிலும் நன்கு விளையும். இதன் மகத்துவம் தெரியாததால் விவசாயிகள் இப்பழக்கன்றுகளை விளைவிக்க முன்வரவில்லை.

திராட்சை, ஏலக்காய், தேயிலை, காபி போன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற பணப்பயிர் நோனிப்பழ சாகுபடி தான்.

 

click me!