வைகாசி மாதம் நடவை துவங்கி மாசி மாதம் அறுவடை முடியும்.
ஒரு ஏக்கருக்கு மஞ்சள் பயிரிட 750-800 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகிறது.
ஒரு கிலோ விதை மஞ்சள் 30-40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வெட்டுக் கூலியோடு சேர்த்து ஏக்கருக்கு நடவு செலவு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 30-40 டன் வரை அறுவடை கிடைக்கிறது.
சென்றாண்டு மஞ்சள் விலை உச்சியில் இருப்பதால் மஞ்சள் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெற முடியும்.
மஞ்சளுக்கு ஊடுபயிராக மிளகாயையும் பயிரிடலாம். மிளகாய் பயிரிடுவதால் விளைச்சல் அதிகரிப்பதோடு, லாபமும் பெருகும்.
மஞ்சளை நிறமேற்றுவதால் நல்ல லாபம் பெறலாம்
மஞ்சளுக்கு நிறமேற்றுவது மிகவும் அவசியம். 100 கிலோ மஞ்சளை மெருகேற்ற படிகாரம் 40 கிராம், மஞ்சள் தூள் இரண்டு கிலோ, ஆமணக்கு எண்ணெய் 140 கிராம், சோடியம் பை சல்பேட் 30 கிராம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் 30 மில்லி சேர்த்து தயாரிக்கப்பட்ட கரைசலை கொண்டு நிறம் ஏற்றலாம்.
மஞ்சள் கொடியுடன் ஆல்கஹால் சேர்த்து கரைசல் தயாரித்து மஞ்சளுக்கு நிறம் ஏற்றலாம். மஞ்சளை தரம் பிரிப்பதன் மூலமும் நல்ல லாபம் பெறலாம்.