கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கலாம்…

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 04:47 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கலாம்…

சுருக்கம்

 

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர்.

வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலங்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.

இதை தவிர்க்க, விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர். இத்துடன் இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.

பூண்டின் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழுகும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கிறது,

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!