இந்த இரண்டு பூச்சிகளாலும் தென்னை வெகுவாக தாக்கப்படுகிறது... இப்படி சுலபமாக தடுக்கலாம்...

 |  First Published Jun 23, 2018, 4:40 PM IST
Coconut is also attacked by these two insects ... it can be easily prevented ...



1.. சிவப்பு பனை அந்துப்பூச்சிக 

சிவப்பு பனை அந்துப்பூச்சிகள் பாதிப்பு தென்னை மரத்தில் இருந்தால் தென்னை மர குருத்தில் பிசுபிசுப்பு பழுப்பு திரவம் மற்றும் இலைகளின் மூலம் தண்டு துளைகள் அடைந்து மரத்தில் உள்ள நாரினை வெளியேற்றுவதால் மரம் அழிந்து விடும் அபாயம் ஏற்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த பிரச்சனையிலிருந்து விடுபட 1.1 கார்பரில் (20gm 1 லிட்டர்) தண்ணீர் கலந்து சேதமடைந்த பகுதியில் உள்ள துளைகளில் ஒரு புனல் பயன்படுத்தி ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் தென்னை  மரத்திற்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடலாம்.

2.. கருப்பு கம்பளி பூச்சி 

கருப்பு கம்பளி பூச்சியின் பாதிப்பு பெரும்பாலும் மே, ஜனவரி மாதங்களில் ஏற்படுகிறது. இந்த கம்பளி பூச்சி தென்னை மரத்தின் இலைகளில் உள்ள பச்சையத்தை உணவாக உட்கொள்கிறது. இவ்வாறு உட்கொள்வதால் தென்னை மரத்தின் இலைகள் முழுவதும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. 

இந்த பாதிப்பிலிருந்து விடுபட 0.02% Dishlorvos 100 Ec யை தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இலைகளின் மீது தெளித்தால் இந்த பாதிப்பிலிருந்து விரைவாக விடுபடலாம். உயிரியல் ஆய்வின் படி Gorrzus nephantidis, Elasmns nephantidis மற்றும் Bravhimeria nosatoi போன்ற ஒட்டுண்ணிகளை பாதிக்கப்பட்ட இலையின் மீது செலுத்தினால் இவை இலைகளுக்கு தகுந்த பாதுகாப்பினை அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


 

click me!