தட்பவெட்பம் மாறி மாறி ஏற்படுவதால் தென்னையில் நோய்த் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். எனவே, தற்போது பருவநிலை மாற்றங்கள் நிலவுவதால் தென்னை சாகுபடி விவசாயிகள் நோய்த் தடுப்புப் பணிகளில் அதிக கவனமுடன் இருப்பது அவசியம்.
தென்னையைத் தாக்கும் நோய்கள்
undefined
1.. வாடல் நோய்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த நோய் தென்னை மரங்களில் பரவலாகக் காணப்படும்.
தென்னை மரம் ஒன்றுக்கு 5 மில்லி காலிக்ஸின் என்ற பூஞ்சானை கொல்லி மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வேர் மூலம் உள்செலுத்துவதன் மூலம் இந்த நோய்த் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
2.. குருத்து அழுகல் நோய்:
பைட்சோஸான் 5 கிராமுடன் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து குருத்துப் பகுதி முழுவதும் நன்கு நனையும்படி தெளிப்பதன் மூலம் குருத்து அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
3.. ஒல்லிக்காய்
மரத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை 250 கிராம் போராக்ஸ் நுண்ணூட்டத்தை 5 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்சினால் ஒல்லிக்காய் ஏற்படுவதை நிவர்த்தி செய்யலாம்.
4.. நுனி சிறுத்தல்
ஆரம்ப நிலையிலேயே உள்ள மரங்களுக்கு
இரண்டு கிராம் பெர்ரஸ் சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, மரம் ஒன்றுக்கு 200 மில்லி வீதம் வேர் மூலம் செலுத்தினால் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
வளர்ந்த தென்னை மரத்திற்கு
துத்தநாக சல்பேட் 200 கிராம் போராக்ஸ் 200 கிராம், மாங்கனீஸ் சல்பேட் 100 கிராம், காப்பர் சல்பேட் 50 கிராம் மற்றும் சோடியம் மாலிப்பேட் 10 கிராம் கொண்ட கலவையை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இடுவது நன்மை அளிக்கும்.