சீனாவின் மரபனு கீரை “DOG1”… விவசாயிகளே உஷார்ர்ர்ர்…..

 |  First Published Oct 8, 2016, 5:54 AM IST



UC Davis Seed Biotechnology Center மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை ஈடு செய்ய புதிய மரபணு மாற்றங்களை கீரை விதைகளில் பயன்படுத்த உள்ளனர். சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் விதைகளை உருவாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர. ஆனால், மனிதர்களுக்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
>
> பூக்கும் கீரை விதைகளை பற்றி விரிவான முறையில் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய இந்த ஆய்வு கீரை விளைச்சலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வாழ்க்கை சுழற்சி மரபணு, குறிப்பிட்ட மைக்ரோ மரபணுவினை உருவாக்குகிறது. DOG1, மரபணு கீரை விதைகள், கீரைகளில் விரைவாக பூக்கள் உருவாகாமல் இருக்க உதவும். இதனால் கீரை வளர்ச்சி அதிகமாகும். ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று யாருக்கும் தெரியாது.
>
> காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப கீரை விதைகளில் புதிய மரபணுக்களை பயன்படுத்துவதால் அதன் மகசூல் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூக்கும் தாவரங்களுக்கு பொதுவாக சரியான வெப்பநிலை கண்டிப்பாக தேவைப்படும். கீரை வகைகளுக்கு மிதமான வெப்பம் கண்டிப்பாக அவசியம். புதிய DOG1 கீரை மரபணு அதிக வெப்பநிலையிலும் நன்றாக வளரும் ஆற்றல் கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
>
> இயற்கை முறையையும், இயற்கை விதையையும் விடுத்து அனைத்து விதைகளும் மரபனுவிற்கு மாற்றப்படுகிறது. இதனால், மகசூல் அதிகரிக்குமே தவிர இவற்றை உண்ணும் மனிதர்களின் நிலை குறித்து எந்த் ஆய்வும் கூறாது.
>
> தமிழகத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு, இப்போதுதான் இயற்கை முறை விவசாயத்திற்கு திரும்புகின்றனர். இந்த நேரத்தில், அனைத்தையும் போலியாக உருவாக்கும் சீனாவின் இந்த விபரீத ஆய்வு மக்களுக்கே கேடின்றி நன்மையைத் தராது...

click me!