இறைச்சிக் கோழி வளர்ப்பில் இந்தியாவின் நிலை பற்றித் தெரியுமா?

First Published Jan 11, 2017, 1:19 PM IST
Highlights


கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.

உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன.

வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் வகிக்கின்றது.

தற்போது இறைச்சிக்கோழி உற்பத்தி ஆண்டு வளர்ச்சியில் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

எனவே கோழி வளர்ப்பு தேசியக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிப்பதோடு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும் தொழிலாகவும் இருக்கிறது.

இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்

  • முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு.
  • வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே.
  • அதிக அளவுக்  கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும்.
  • இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம்.
  • குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம்.
  • ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை மலிவாக இருப்பதால் அதன் தேவை அதிகமாக உள்ளது.
click me!