சுற்றுச்சூழலை காக்கும் வேப்ப மரத்தை பூச்சிக் கொல்லியாய் பயன்படுத்தலாமா?

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
சுற்றுச்சூழலை காக்கும் வேப்ப மரத்தை பூச்சிக் கொல்லியாய் பயன்படுத்தலாமா?

சுருக்கம்

Can be used as a pesticide to protect the environment?



வேப்ப மரம் 

சுற்றுச்சூழலை காக்கும் வேப்ப மரத்தை பூச்சிக் கொல்லியாய் தாராளமாக பயன்படுத்தலாம். 

வேப்ப மரம் பல்லாயிரக்கணக்கான மக் களுக்கு விலை குறைவான மருந்துகளை தருகிறது. வேப்பமரம் எண்ணிக்கையில் அதிகம் வளர்வதால் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கிறது. பூமியில் சூரியனின் வெப்ப தாக்குதல் குறைகிறது.

வேப்ப மரம் கிராமங்களின் மருத்துவச் சாலை என்ற கருத்தை அமெரிக்க விஞ்ஞானி கள் வலியுறுத்துகின்றனர். 

பூச்சிக்கொல்லி மருந்து

வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பருத்தி மற்றும் புகையிலைச் செடிகளை அழிக்கும் பூச்சிகளை அழிக்கிறது. 

இதனை சோதனை முறையில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தி அறிவியல் வல்லுநர்கள் வெற்றிகண்டனர்.

வேப்ப மரத்தின் பயன்கள்

** வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. 

** அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. 

** எந்த சூழ்நிலையிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. 

** வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும்.

** வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே அழித்து விடுகிறது. 

** வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த செடியினையும் அழிக்காமல் உள்ளது. 

** வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தில் உள்ளடையதில் டாலமேட்டை விட அதிக சக்தி வாய்ந்தவை யாகும்.

** இத்தகு கண்டுபிடிப்புகளின் பலனாய் வேப்ப மரத்தின் முக்கியத்துவம் வியாபார முக்கியத்துவம் அடைந்து விட்டது. 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!