கறிக்கோழி
கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோழி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.
சிறந்த பராமரிப்பு முறைகள்
கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.
காற்றோட்ட வசதி:
கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.
மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.
தரை இடஅளவு:
ஒரு கோழிக்கு 1 சதுர அடி
மூக்கு வெட்டுதல்:
ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.
கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு:
1.. நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்
2.. மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.
3.. 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப்.1 போட வேண்டும்.
4.. கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.
5.. பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.
6.. தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.
விற்பனை செய்தல்:
1.. 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.
2.. கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.
3.. திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.