சிகப்பு அரும்புபோல் முசிறு (எறும்பு) மா, எலுமிச்சை மற்றும் எல்லா மரத்திலும் அதிகமாக உள்ளது மேலும் எறும்பு அரிப்பதால் இலை சுருண்டுவிடுகிறது மேலும் எறும்பு மரத்தில் கூடு கட்டிவிடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மாமரத்தில் எறும்பு அதிகம் உள்ளதால் தேனீக்கள் மரத்திற்கு செல்லாமல் இருக்கும் எனவே மகரந்தச்சேர்க்கை நடைபெறாது. ஆகையால் பூக்கள் உதிர ஆரம்பிக்கும். மரத்தில் எறும்பை கட்டுப்படுத்த டைக்ளோரோ வாஸ் (நுவான்) என்ற மருத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தூர் முதல் இலைகள் நனையும் அளவுக்கு தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் (ராக்கர் தெளிப்பான் கொண்டு தெளிப்பது நல்லது). ஒரு மரத்திற்கு குறைந்தது 20 லிட்டர் தண்ணீரில் 40 மில்லி நுவான் கலந்து தெளிக்க வேண்டும். நுவான் மருந்து கிடைக்காவிட்டால் குளோரோபைரிபாஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.