அனைத்து வகையான நிலங்களிலும் வளரும் கறிவேப்பிலை சாகுபடி செய்து லாபத்தை அள்ளலாம்…

 |  First Published Aug 1, 2017, 12:41 PM IST
All kinds of land can be grown in the cultivation of cultivated curry leaves ...



தென்னிந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை சேர்க்காத உணவு வகைகளே இல்லை. அகத்திகீரைக்கு அடுத்தபடியாக சுண்ணாம்பு சத்து  அதிகம் உள்ள உணவு பொருள் கறிவேப்பிலை.

தென்னிந்தியாவில் அனைத்து வீடுகளிலும் காணப்படும் ஒரே தாவரம் கறிவேப்பிலை ஆகும். அனைத்து வகையான நிலங்களிலும் வளரும். செம்மண் மற்றும் தண்ணீர் தேங்காத மண்ணில் நன்கு வளரும். விதைகள் மூலமாக அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை மற்றொன்று செங்காம்பு நிறம். வருடங்கள் ஆக, ஆக கறிவேப்பில்லை மரமாக வளர்ந்து விடும். செங்காம்பு நிறமுடைய ரகம் வணிகரீதியில் அதிகம் பயிரிடப்படிகிறது.

நடவு செய்யும்பொழுது 3*3 அடி என்ற இடைவெளி யில் நடவு செய்வது சிறந்தது. சிலர் நெருக்கி நடும் போது 2.5*2.5 அடி என்ற அளவில் நாடுகிறார்கள்.

1 ஏக்கருக்கு சுமார் 5000 நாற்றுகள் தேவை. நெருங்கிய நடவுக்கு 7000 முதல் 7500 நாற்று தேவை. கரிவேப்பிலையை ஜூலை முதல் ஜனவரி  வரை நடவு செய்யலாம்.

மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு, மீன் அமிலம் ஆகியவற்றை சிறிது மக்கிய தொழுஉரத்துடன் கலந்து அடிஉரமாக இட்டு பின் நாற்றுகளை நடவு செய்தால் விரவில் வேர் பிடிக்க ஆரம்பிக்கும்.

கறிவேபில்லைக்கு மண்ணின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்சவேண்டும். மேம்படுத்தப்பட அமிர்த கரைசல் மற்றும் பழகரைசல் இவற்றை தொடர்ந்து கொடுப்பதன் மூலம் செடிகளுக்கு நன்கு வறட்சியை தாங்கும் சக்தி கிடைக்கிறது. இதனால் செடிகளில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்.

கறிவேப்பிலை நட்ட ஆறாம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து ஐம்பது நாட்களுக்கு வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம்.

உயிர் உரங்கள் மற்றும் வேம்VAM (வேர்பூஞ்சாணம்) கண்டிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். ஏனெனில் இது பல்லாண்டு உயிர் வாழும் பயிர்.

கறிவேப்பிலை பயிரை அதிகம் தாக்கும் பூச்சிகள் இரண்டு வகைகள். ஒன்று சாறு உறிஞ்சும் பூச்சி, மற்றொன்று மாவுப்பூச்சி. கற்பூரகரைசல் கரைசல்  தொடர்ந்து கொடுப்பதன் மூலம் எளிதாக இந்த பூச்சிகளை முற்றிலும் கட்டுபடுத்தலாம்.

மீன் அமிலம் தொடர்ந்து தெளிப்பது மூலம் அளவில் பெரிய மற்றும் கரும்பச்சை நிறமான இலைகளை பெறலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு முற்றிய பெரு-நெல்லி மற்றும் பத்து பச்சை கறிவேப்பிலை இலைகள் சேர்த்து பச்சையாக சாப்பிட்டு வந்தால், எந்த விதமான வியாதிகளும் நமது உடலை அண்டாது.

click me!