சீரான வளர்ச்சி, தரமான விளைச்சல் தரும் இயற்கை உரம்..

 |  First Published Mar 9, 2017, 3:11 PM IST
Vermi compost keeping people changing panmaik waste compost coconut fiber waste compostcomposted manure



மண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் கழிவு உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம், உரமேற்றிய தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் பற்றி அறிந்தும், தயாரித்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். மாடு, ஆடுகளின் சாணம் மக்கிய பின் சிறந்த உரமாக பயன்படுகிறது.

“எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாய் இருக்கும். காளைகளின் பலத்தினாலே மிகுந்த வரத்துண்டு’ என முன்னோர் கூறினர்.

Tap to resize

Latest Videos

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்,”பசுக்கள், காளைகளை ஒவ்வொரு விவசாயியும் வளர்க்க வேண்டும்,” என்றார்.

இக்கருத்தை பல விவசாயிகள் உற்று நோக்கி வருகின்றனர். எனவே பசுக்களை வாங்குகின்றனர். எருதுகளை கொண்டு உழுகின்றனர்.

சாணம் கொண்டு மண்புழு உரம் தயாரித்து சுய தேவைக்கும், விற்கவும் செய்கின்றனர். வேப்ப எண்ணெய் கலந்த யூரியா, வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களை பெரிய உர நிறுவனங்கள் தயாரித்து விற்கின்றன.

இயற்கை உரங்களின் நன்மை: சாகுபடி செலவு குறைகிறது. நிகர லாபம் அதிகமாகிறது. மண் வளம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு மேன்மையாகிறது.

இயற்கை உரங்கள் மட்டும் பயன்படுத்தினால் விளை நிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகளின் (பாக்டீரியா) எண்ணிக்கை பெருகுகிறது.

பயிர்கள் இயல்பாகவே பூச்சி, நோய் எதிர்ப்பு திறனை பெறுகின்றன. இதனால் ரசாயன பூச்சி மற்றும் நோய் மருந்துகளை தெளிப்பதை குறைக்கவும் படிப்படியாக விட்டு விடவும் செய்யலாம்.

மண்ணின் கட்டமைப்பு கடினமாகாததால் பயிர்கள், சத்துக்களை எளிதாக எடுத்து கொள்கின்றன.

சீரான பயிர் வளர்ச்சியும் தரமான விளைச்சலும் கிடைக்கும். சுற்றுப்புற சூழல் தூய்மை ஆகிறது.

இயற்கை உரங்களால் விஷமில்லா பயிர்கள் கிடைக்கின்றன. அவற்றை உண்பதால் ஆரோக்கியமான சந்ததி உருவாகிறது.

இயற்கை உரங்களை விவசாயிகள் தாங்களே தயாரிப்பதால் உரச்செலவினம் குறைகிறது.

click me!