1.. நீலப் பூசண அழுகல்
அறிகுறிகள்
1.. நீலப் பூசணம் பொதுவாக அறுவடை செய்யும் பொழுதும், சேமித்து வைக்கும் பொழுதும் காணப்படும்.
2.. தொடக்க அறிகுறிகள் செதில்களின் வெளிப்புறத்தில் நீர் கோத்தது போன்று தோன்றும்.
3.. பச்சை நிறத்தில் இருந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் மாறிவிடும்.
4.. பின் நைவுப்புண்களின் மேல் சாம்பல் பூசணம்ஏற்படும்.
5.. நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சதையுள்ள செதில்கள் சாம்பல் நிறமாக வெட்டும் பொழுது தோன்றும்.
6.. சேப்ரோமைட்ஸினால் செடிகள் சிதைவுற்றும், திசுக்கள் முதிர்ந்தும் காணப்படும்.
7.. அடுத்தபடியாக வெங்காய குமிழ்களிலும், பூண்டுகளிலும் புண்கள், சிறாய்வுகள் அல்லது தவிர்க்க முடியாத திசுக்கள் ஏற்படும்.
8.. ஒரு முறை குமிழுக்குள் புகுந்தால், சதையுள்ள செதில்களில் பூசண இழை வளரத் தொடங்கும். இறுதியாக பூசணவித்துக்கள் அதிகமாக நைவுப்புண் தோன்றும்.
9.. மிதமான வெப்பநிலை 700 – 770 பே (210 – 250 செ)மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள வெப்ப நிலையில் வரும்.
2.. புசேரியம் அடி அழுகல்
அறிகுறிகள்
1.. மஞ்சள் நிறமாக மாறி, பின்னோக்கி காயத் தொடங்கும்·
2.. வெள்ளை பூசண வளர்ச்சி குமிழின் அடிப்பகுதியில் தோன்றும் மண் மூலம் இயற்கையாகப் பரவும்.
3.. புண்கள் மற்றும் வேர் வடுக்கள்தான் நோய்க் காரணிகள் உருவாகும் முதல் படிதொடரும்.