**இரண்டு மூன்று வாரங்களுக்கு சாதனத்தை நீர் ஊற்றி நன்கு பதப்படுத்திய பிறகு சாதனத்தை நிரப்ப ஆரம்பிக்க வேண்டும்.
**சாதனத்தை ஒரே நாளில் நிரப்ப முயலுவது கடினம். ஒரு மாத சாணத்தை சேமித்து வைத்து உலர்ந்த சாணத்தை நீக்கிவிட்டு நிரப்பலாம்.
**சாணத்தை நீருடன் 1:1 என்ற விகிதத்தில் நிரப்ப வேண்டும்.
**கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய வடிவமைப்பாக இருந்தால் சாணக் கழிவு வெளிவரும் குழாய் நிரம்பி வழியும் வரை ஊற்றலாம். நிலையான கூடார வடிவமைப்பாக இருந்தால் மண்டபத்தின் அடிமட்டம் (சாணம் வெளிவரும் தொட்டி விரிவடையும் மட்டம்) வரை தான் ஊற்றலாம்.
**வாயு வெளிவரும் குழாயை மூடி விட வேண்டும். சாணம் நிரப்பிய இரு வாரங்களில் வாயு உற்பத்தி தொடங்கும் இதற்கு மேலும் சாணக் கரைசலை ஊற்றக் கூடாது.
**நிலையான கூடார அமைப்பாக இருந்தால் ஓரிரு வாரங்களில் சாணம் உட்புகும் வெளிவரும் தொட்டிகளில் சாண மட்டம் தானாக உயருகிறதா என்று பார்க்க வேண்டும். இவ்வாறு சாண மட்டம் உயர்ந்து கொண்டே வந்து சாணம் வெளிவரும் தொட்டியின், மேல் மட்டத்தில் விடப்பட்ட வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்து விட்டால் சாதனம் சரியாக இயங்க ஆரம்பித்து விட்டது என்று அறியலாம்.
**சாதனம் சரியாக இயங்குகின்றதா எனத் தெரியவேண்டுமானால் காலையில் சாணம் வெளிவரும் தொட்டியில் சாண மட்டம் உயர்ந்த இடத்தில் ஒரு கோடு போட்டு வைக்கவேண்டும்.
**பின்னர் வாயுவை சமையலுக்குப் பயன்படுத்தியவுடன் மட்டம் தானாக இறங்க ஆரம்பிக்கும். அவ்வாறு ஒரு அடி முதல் இரண்டு அடிவரை இறங்க ஆரம்பித்தவுடன் குறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாலையில் மட்டம் தானாகவே உயரவேண்டும்.
**வாயுவைப் பயன்படுத்தியவுடன் மட்டம் இறங்கிவிடும். இவ்வாறு நடைபெற்றால் சாதனம் நல்லமுறையில் செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
**கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணைய வடிவமைப்பாக இருந்தால் வாயு உற்பத்தி ஆனவுடன் இரும்புக் கொப்பரை மேலே சென்றுவிடும். நாம் வாயுவைப் பயன்படுத்திய உடன் இரும்புக் கொப்பரை கீழே இறங்கிவிடும்.
**இந்த நிலையைக் கொண்டு சாதனம் நல்ல முறையில் இயங்குகின்றது என்று அறியலாம்.