எப்சம் உப்பு:
எப்சம் உப்பை நீரில் கரைத்து, தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு ஊற்றினால், எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்கள் செடிகளுக்கு கிடைத்து, செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
காபி பொடி:
காடி பொடியும் ஒரு சிறந்த உரம் தான். அதிலும் இந்த காபி பொடியை ரோஜா செடிகளுக்கு தூவினால், காபி பொடியில் உள்ள நைட்ரஜன், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் செடிகளுக்கு கிடைத்து, செடிகளும் நன்கு வளரும்.
முட்டை ஓடு:
முட்டை ஓடும் ஒரு சூப்பரான இயற்கை உரமாகும். எனவே முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால், முட்டையில் உள்ள கால்சியம் கார்போனேட் செடிகளுக்கு கிடைக்கும்.
வினிகர்:
4 டீஸ்பூன் வினிகரை தண்ணீரில் கலந்து, மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ஊற்றி வந்தால், செடிகள் நன்கு வளரும்.
மீன் தொட்டி நீர்:
மீன் தொட்டியில் உள்ள தண்ணீரில் நைட்ரஜன் மற்றும் செடிகளுக்கு தேவையான இதர சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இந்த நீரை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு உறுதியுடன் வளரும்.
சாம்பல்:
கட்டைகளை எரித்த சாம்பலும் மிகச்சிறந்த உரமாகும். ஏனெனில் சாம்பலில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் கார்போனேட் அதிக அளவில் உள்ளது.
காய்கறி குப்பைகள்:
காய்கறிகளின் தோல்களை, செடிகளைச் சுற்றி போட்டால் செடிகள் நன்கு வளரும்.
ஓக் மர இலைகள்:
ஓக் மர இலைகளை ஒரு வாளி தண்ணீரில் போட்டு, சூரிய வெப்பத்தில் தண்ணீர் நிறம் மாறும் வரை வைத்து, பின் அதனை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
களைகள்:
தோட்டத்தில் செடிகளைச் சுற்றி வளரும் களைச் செடிகளை வேரோடு பிடுங்கி, அதனை உரங்களாக பயன்படுத்தலாம். இதனால் களைச்செடிகள் மங்கி, செடிகளின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.