Asianet News TamilAsianet News Tamil

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் நடுகடலில் கருப்பு கொடி போராட்டம்!

தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடலில் வந்து மீன்பிடிப்பதாகக் கூறி யாழ் மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Sri Lankan fishermen protest in the Mediterranean by raising black flags against Tamil Nadu fishermen sgb
Author
First Published Mar 3, 2024, 1:07 PM IST

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி, கண்டனம் தெரிவித்து இலங்கை மீனவர்கள் நடுகடலில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடலில் வந்து மீன்பிடிப்பதாகக் குற்றம்சாட்டி, யாழ் மாவட்ட மீனவர்கள் கடலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்பாணம் - குருநகரை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட மீனவர்கள் 21 படகுகளில் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

ஊர்காவற்துறை இறங்குதுறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த குருநகர் மீனவர்கள் காரைநகர் இறங்குதுறையில் உள்ள கடற்படை முகாமில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் நெடுந்தீவு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

மீனவர்கள் தங்களது படகுகளில் கறுப்புக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் அதிகம் அத்துமீறும் கடல்பகுதியான நெடுந்தீவுக்கும் நயினாதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில்  மீனவர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மகன் ஆனந்த் அம்பானி பேச்சைக் கேட்டு அழுத முகேஷ் அம்பானி; நெகிழ வைக்கும் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios