Asianet News TamilAsianet News Tamil

தடுப்பு சுவரை தாண்டிய ராகுல்.. சார்.! ஒரு போட்டோ எடுக்கணும்.. ஸ்வீட் கடையில் நெகிழ்ந்த ஊழியர்கள்..!!

கோவையில் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி இனிப்பு வாங்கி ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை  ஆதரித்து கோவை  செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல் காந்தி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் சிங்காநல்லூரிலுள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி, தடுப்பு சுவரை தாண்டி சென்றார். அங்கு, "ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்தும் கலந்த இனிப்பு வகைகளை வாங்கினார்.  பின்னர் ராகுல் காந்தி ஸ்வீட் கடை ஊழியர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories