Asianet News TamilAsianet News Tamil

ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? நீதிமன்றம் தான் சரி.. ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி..

தமிழ்நாடு ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? என உச்சநீதிமன்றம் நீதிபதி கண்டித்தார் என்று அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூரில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “சொத்து குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பரிந்துரை செய்தார். ஆளுநர் பிடிவாதமாக எனக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருந்து வந்துள்ளார். மீண்டும் சட்டப்படியாக எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். வேற வழி இல்லாமல் நேற்றுதான் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் நான் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றினேன். மோடி அடிக்கடிக்கு வருகிறார். மோடி தமிழ்நாட்டுக்கு ஒண்ணுமே செய்யவில்லை.

மோடி எத்தனை முறை வந்தாலும், தமிழ்நாடு திராவிட கோட்டை. இது யாராலும் அசைக்க முடியாது. தமிழ்நாட்டுக்கு செய்தது எல்லாமே தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் எப்படி ஆட்சி செய்தாரோ அதுபோல் மாறிவிடும். 40 தொகுதியிலும் தமிழ்நாடு முதலமைச்சர் தான் வேட்பாளர். ஆகையால் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிகப்படியாக வெற்றி பெற செய்ய வேண்டும் நம்மளுடைய வேலை” என்று பொன்முடி கூறினார்.

Video Top Stories