Asianet News TamilAsianet News Tamil

தாய்க்கு பிரமாண்ட கோவில்; கையேந்தி வருபவர்களுக்கு அள்ளி கொடுக்கும் மருத்துவர் - தேனியில் சுவாரசியம்

தேனி மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மறைந்த தனது தாயாருக்காக கோவில் கட்டிய மருத்துவர் உதவி கேட்டு வரும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்யத் தொடங்கி உள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜெகந்த். இவரது தாயார் ஜெய மீனா. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

அவரது தாயார் மகன் ஜெகந்திடம்  அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். மேலும் புற்றுநோயால் பாதிப்படைந்து நான் அவதியுறுவதால், இந்த நோயால் பாதிப்படைந்துள்ளவர்களுக்கு உன்னால் முடிந்த மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். தாயாரின் பேச்சைக் கேட்கும் விதமாக அவருக்காக  சுருளி அருவியில் மகளிர் தினமான இன்று ஸ்ரீ ஜெயமீனா என்ற பெயரில் கோவிலை  கட்டி அதற்கான திறப்பு விழாவினை நடத்தினார்கள்.

இந்த திறப்பு விழாவில் புற்றுநோயால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பணமாக வழங்கி நலத்திட்ட உதவிகளை தொடங்கினார். மேலும் தனது தாயார் கோவிலில் வந்து மருத்துவ உதவி கேட்கும் அனைவருக்கும்  தன்னால் முடிந்தவரை மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என  தெரிவித்தார்.

Video Top Stories