Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விதியில் என்ன தவறு உள்ளது என ஓசூரில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராமானுஜ ஜீயர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஓசூரில் பெங்களூரு சாலையில் தர்கா என்ற இடத்தில் புதிய ஜவுளி கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ செண்டலங்கரா செண்பக மன்னர் சம்பத்குமார ராமானுஜ ஜீயர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து அனைவரையும் வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அயோத்தி கோயிலின் தீர்த்தத்தை பிரசாதமாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ செண்டலங்கரா செண்பக மன்னர் சம்பத்குமார ராமானுஜ ஜீயர், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? சிலருக்கு அவர்களது அப்பா பெயர் மறந்து விட்டது. தங்களது அப்பா பெயர்களை சொல்ல பயந்து வருகிறார்கள். ஏன் பயப்பட வேண்டும்? நாம் இருப்பது ஒரே நாட்டில் தான். நாம் வேறு ஒரு நாட்டில் வாழவில்லை, ஒரே நாடு தான் என்று சொல்லிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. சம்பிரதாயமாக ஒரு வீட்டில் ஒரு பூஜை, ஒரு வீட்டில் ஒரு தலைவர், அதேபோல் தான் நமது நாடு நமது தேர்தல், அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில் தவறு இல்லை என கூறினார்.

Video Top Stories