Asianet News TamilAsianet News Tamil

சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் உழைப்பாளிகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி குற்றம் சாட்டி உள்ளார்.

விளவங்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்பதாக கூறிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வழங்குகிறது. சில பகுதிகளில் கட்சிக்காரர்களுக்கு மட்டும் இந்த பணம் வழங்கப்படுகிறது.

முதன்மை பதவிக்கு வருவதற்கு எனக்கு அனைத்து தகுதிகளும் இருந்தாலும் நான் பெண் என்பதால் என்னை வேண்டுமென்றே திமுகவும், காங்கிரசும் இணைந்து பின் வரிசையில் அமர வைத்தனர். பாஜகவில் எனக்கு கிடைக்கப் போகும் அங்கீகாரத்தை பொறுத்திருந்து பாருங்கள். 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அப்பா மாநிலங்களவை உறுப்பினராகவும், மகன் மக்களவை உறுப்பினராகவும் இருப்பார். தொடர்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். என்னை பொறுத்தவரை சாமானியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சுயநலமின்றி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Video Top Stories