Asianet News TamilAsianet News Tamil

சென்ட்டம் எடுத்த மாணவிகளை ஃப்ளைட்டில் அழைத்து சென்ற ஆசிரியை! 

students flight trip
students flight trip
Author
First Published Oct 21, 2017, 3:49 PM IST


பொது தேர்வில், சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவிகளை, விமானத்தில் அழைத்து சென்று அசத்தி உள்ளார் சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர்.

சென்னை, அம்பத்தூரில் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக செல்வகுமாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். 

மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென ஒரு உண்ணம் தோன்றியுள்ளது. அது என்னவென்றால், பொதும் தேர்வில் சமூக அறிவிய்ல பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தால் சொந்த செலவில் விமானத்தில் அழைத்து செல்வது என்பதே. 

தனது எண்ணத்தை மாணவிகளிடம் ஆசிரியை செல்வகுமாரி கூறியுள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார். அவரின் இந்த செயலை கல்வித்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியை செல்வகுமாரி கூறியதாவது, வரைபடங்களில் விமான வழித்தடங்கள் குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் இப்படியொரு பரிசை அறிவித்தேன். இதனால் மாணவிகள் ஊக்கத்துடன் படிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தேன். கடந்த கல்வி ஆண்டின்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் என் வகுப்பில் ஒரே ஒரு மாணவி மட்டும் 100 மதிப்பெண் பெற்றிருந்தார். இந்த ஆண்டு 6 மாணவிகள் 99 மதிப்பெண்கள் பெற்றனர். 

அதேபோல், மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆங்கில பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றிருந்தார். இந்த இரண்டு மாணவிகளையும் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றேன். கோவையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களை சுற்றி பார்த்த பின்னர் ரயிலில் சென்னைக்குத் திரும்பினோம் என்று ஆசிரியை செல்வகுமாரி கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios