Asianet News TamilAsianet News Tamil

நான் முதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் கூறியதை சுட்டிக்காட்டி, நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

MK Stalin pride over naan muthalvan scheme who helped youths in civil service exam smp
Author
First Published Apr 17, 2024, 11:02 AM IST

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட அரசு குடிமை பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகள் முறைப்படி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில், இந்திய நிர்வாகப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்கு  1016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடைந்த 1016 பேருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் கூறியதை சுட்டிக்காட்டி, நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் 2ஆவது இடமும் அகில இந்திய அளவில் 78ஆவது இடமும் பெற்று மருத்துவர் பிரசாந்த் என்பவர் சாதனை படைத்துள்ளார்.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் ஆபத்து: நிர்மலா சீதாரமன் கணவர் பரகல பிரபாகர் சாடல்!

 

 

இதுகுறித்து மருத்துவர் பிரசாந்த் கூறுகையில், யுபிஎஸ்சி இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவர் பிரசாந்த் பேசும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல. நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான UPSC முடிவுகளே அதற்கு சாட்சி.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios