Asianet News TamilAsianet News Tamil

மாமியார் பாஜக எம்எல்ஏ தெரிந்தும்.. EPS-ஆல் கொண்டுவரப்பட்ட ஈரோடு வேட்பாளர் இன்று விலைபோய்விட்டாரா?கேசி.பழனிசாமி

ஈரோடு தொகுதியில் அதிமுகவினரை முழுவதுமாக வேட்பாளர் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள கே.சி.பழனிசாமி, உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் கூறி வருவதாக தெரிவித்துள்ளார்

KC Palaniswami criticizes Erode constituency candidate Aatral Ashok for disrespecting AIADMK
Author
First Published Apr 18, 2024, 2:35 PM IST

நம்பிக்கை துரோகம் செய்தாரா?

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளர் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி வெளியிட்ட சமூகவலைதள பதிவில், நம்பி ஏமாந்தாரா? அல்லது நம்பிக்கை துரோகம் செய்தாரா? எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பியுள்ளார். 

* ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு உறுதியாளிக்கப்பட்டு EPS-ஆல் கொண்டுவரப்பட்டவர் இன்று திமுகவிடம் விலைபோய்விட்டாரா? 

KC Palaniswami criticizes Erode constituency candidate Aatral Ashok for disrespecting AIADMK

அதிமுகவினரை கண்டு கொள்ளதாக வேட்பாளர்

* கடந்த 2 நாட்களாக கட்சிக்காரர்களை முழுமையாக புறக்கணித்தும் தான் மிகப்பெரிய தொகையை கொடுத்தே சீட்டு பெற்றதாக்கவும் அதனால் தேர்தல் செலவுகளுக்கு தன்னை யாரும் அணுக கூடாது உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் ஏன் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக வேட்பாளர் கோபப்படுகிறார்.

* சரி செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சர்களிடமும் எனக்கு அழுத்தம் கொடுத்தால் நான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து போட்டியிலிருந்து விலகி விடுவேன் என்று எச்சரித்ததாக செய்திகள் வருகிறது.இந்த வேட்பாளரின் தாயார் 1991 தேர்தலில் #அதிமுக சார்பாக MP-யாக இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று விட்டு பிறகு பாஜகவில் இணைந்துவிட்டார். இவரது மாமியார் தற்போதைய பாஜக MLA இது எல்லாம்  தெரிந்தும் ஏன் எடப்பாடி பழனிசாமி இவருக்கு வாய்ப்பு வழங்கினார்?

நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்.! 4 கோடி ரூபாய் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது.! வெளியான வாக்குமூலம் வீடியோ

KC Palaniswami criticizes Erode constituency candidate Aatral Ashok for disrespecting AIADMK

திணறும் அதிமுக நிர்வாகிகள்

* அடிப்படைக் கட்சி உணர்வும், விசுவாசமும், தலைவர்கள் மீதான அபிமானமும், சின்னம் மற்றும் தொண்டர்கள் மீது பற்றுதல் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் ஒரு வியாபாரம் போல சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தின் விளைவு!  தன்னை ஒரு கொடைவள்ளலாக மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி விட்டு கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்றதும் இவர் வாய்ப்புக்காக கொடுத்ததையும் இதுவரை செலவு செய்ததையும் எதிர் தரப்பிடம் பெற்றுக் கொண்டதால் இந்த திடீர் மனமாற்றமா? 

* கட்சிக்காரர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் கவனிப்பு வேலைகள் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு இப்போது வேட்பாளர் பின் வாங்குவதால் கட்சிக்காரர்கள் ஏதோ ஏமாற்றி விட்டார்களோ என்று அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் கெட்ட பெயர் வாங்குகிறார்கள். மேலும் வேட்பாளர் கொடுத்துவிடுவார் என்று நம்பி இதுவரை கடன் வாங்கி செலவு செய்த கட்சிக்காரர்களும் தற்பொழுது செலவு செய்ததை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.  இது எதிர்காலத்தில் கட்சிக்கு ஒரு அவபெயரை ஏற்படுத்தும் அதே போல் இந்த செயல் இதை ஒட்டி இருக்கிற திருப்பூர், பொள்ளாச்சி,  நாமக்கல், கரூர் போன்ற தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவது போல் இந்த வேட்பாளரின் செயல் அமைந்துவிட்டது.

KC Palaniswami criticizes Erode constituency candidate Aatral Ashok for disrespecting AIADMK

திருத்திக்கொள்வாரா எடப்பாடி.?

* எடப்பாடி பழனிசாமியும் கே.சி.பழனிசாமியும் நின்று மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இதே நாடாளுமன்ற தொகுதியில் இன்று அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்பதற்கு காரணம் அரசியலில் வியாபார யுக்தியா? அல்லது கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்த தலைமையின் தவறான முடிவா?  தகுதியானவர்கள் பலர் இருந்தும் தன்னுடைய சுயநலம் மற்றும் ஆணவப்போக்கால் கட்சியை வழி நடத்துகிற பக்குவம் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதா? தங்களை திருத்திக்கொள்வார்களா ? எடப்பாடியும், தங்கமணியும், வேலுமணியும். என கேசி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

வியர்வை சிந்தி விதைத்தவை அறுவடையாகும் நாள் தான் வாக்குப்பதிவு நாள்; விழிப்புடன் இருங்கள் - ஸ்டாலின் கடிதம்

Follow Us:
Download App:
  • android
  • ios