Asianet News TamilAsianet News Tamil

மாலத்தீவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் செல்லவில்லை.. தவறான தகவல்.. மறுப்பு தெரிவித்து விளக்கம்..!

குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க ஏப்ரல் 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக தகவல் வெளியான நிலையில் அச்செய்தி தவறானது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister MK Stalin maldives visit trip in controversy-rag
Author
First Published Apr 26, 2024, 10:48 PM IST

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடம் பிடித்தது.

Chief Minister MK Stalin maldives visit trip in controversy-rag

இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக விமர்சித்ததை தொடர்ந்து இந்தியர்கள், மாலத்தீவை புறக்கணித்தனர். இதனை அடுத்து ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர்.

அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், "முதலமைச்சர் மாலத்தீவு செல்கிறார் என்பது பொய் செய்தி. பிரதான ஊடகங்கள்  தங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வரும் தகவல்களை முறையான வழிகளில் உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவார்கள் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios