Asianet News TamilAsianet News Tamil

சாலை விபத்தில் தெருநாய் பலி; 100 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் - அரியலூரில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்ப

அரியலூரில் லாரி மோதி நாய் உயிரிழந்த நிலையில், லாரிகளால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி 100 லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் அரியலூரில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

village people protest against lorries for control road accident in ariyalur vel
Author
First Published May 6, 2024, 7:02 PM IST

அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விதிமுறைகளை மீறி இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் ஏரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் காரைக்குறிச்சி சாலையில் மண் ஏற்றி சென்ற லாரி தெரு நாய் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி நாய் பலியானது. 

அரியலூரில் சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்; சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு கூலாக பெற்றோருக்கு போன் செய்த கொடூரன்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்து ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டனர். மேலும் அவ்வழியே வந்த 100-க்கும் மேற்பட்ட லாரிகளை இயக்க விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் காரைக்குறிச்சி - அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த தா.பழூர் காவல் துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நேரங்களில் மற்றும் இரவு, பகல் பாராமல் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மனித உயிர்ச்சேதம் மற்றும் தொடர்ந்து கால்நடைகள் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினர். இதற்கு உரிய தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார், தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தந்தை கிடையாது, மரண படுக்கையில் தாய்; விடா முயற்சியால் 4 பாடங்களில் சதம் அடித்து சாதித்து காட்டிய மாணவி

 பின்னர் இது பற்றி கிராம மக்கள் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தையில்  உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர், இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவதற்கும் தயாராக உள்ளோம் என எச்சரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios