Asianet News TamilAsianet News Tamil

அதிமுக தயவில் தான் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆனார்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது கொண்டுவந்தாரா? நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் பேசினாரா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Anbumani Ramadoss became MP thanks to AIADMK. By: Edappadi Palaniswami sgb
Author
First Published Apr 16, 2024, 10:05 PM IST

அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வேஸ்ட் என்கிறார் அன்புமணி ராமதாஸ். ஆனால், அதிமுகவுக்கு தயவில்தான் அவர் இன்று மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தருமபுரியில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜனதா கூட்டணியில் பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி நமது கூட்டணியில் 2-வது இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. தற்போது 3-வது இடமல்ல. ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டார்கள். 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 2-வது இடத்தில் பாமக இருந்தது. 3-வது இடத்தில்தான் பா.ஜனதா இருந்தது.

மீண்டும் பாஜக ஆட்சி... மோடி 3வது முறை பிரதமராக 64% பேர் விருப்பம்: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில் மக்கள் அதிமுக எம்.எல்.ஏ.-க்களை தேர்ந்தெடுத்ததன் மூலம் நாங்கள் உங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தோம்.

எங்களிடம் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார். அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது இந்த பகுதிக்கு கொண்டு வந்தாரா?. தமிழக மக்கள் பயன்படும் வகையில் பாராளுமன்றத்தில் பேசினாரா?. பிரதமரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள். அடிமையாக இருக்க பார்க்கிறீர்கள்.

மத்தியில் யார் என்பது எங்களுக்கு தேவையில்லை. மக்கள்தான் தேவை. மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தனித்து போட்டியிட்டால்தான் பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச முடியும். உங்களுக்கு பதவி வேண்டும். அதனால் கூட்டணி அமைத்துள்ளீர்கள். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

பிரச்சாரம் ஓய்ந்த பிறகு ஆன்லைனில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Follow Us:
Download App:
  • android
  • ios