Asianet News TamilAsianet News Tamil

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைய முழுமூச்சாக பாடுபட்டவர் கனிமொழி - அசை்சர் கீதா ஜீவன் தகவல்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் எம்.பி. கனிமொழியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று, ஆனால் வாக்கு வித்தியாசம் அதிக அளவில் இருக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Kanimozhi was the one who worked wholeheartedly to set up a rocket launch pad in Tuticorin said minister geetha jeevan vel
Author
First Published Mar 21, 2024, 6:13 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள்  கூட்டம் தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன், எம்பி கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் பழிக்கு பழியாக நடந்த படுகொலை; இரு சமூகத்தினரிடையே மோதல் போக்கு, கடைகள் அடைப்பு

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், எம்.பி. கனிமொழி நம்மில் ஒருவராக இருக்கிறார். வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் இருக்கிறார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய முழு மூச்சாக பாடுபட்டவர். வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு விட்டது. வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்க வேண்டும். பாஜக ஆட்சியின் வேதனையையும், நமது சாதனைகளையும் எடுத்துக்கூறி மக்களை சந்திக்க வேண்டும். திமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. மோடி பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திரும்புகிறார் என்றார்.

போட்டியிட்ட 6 முறையும் தோல்வி; 7வது முறையாவது கைகொடுக்குமா தென்காசி? எதிர்பார்ப்பில் கிருஷ்ணசாமி

இதனைத் தொடர்ந்து எம்.பி. கனிமொழி பேசுகையில், கேஸ், பெட்ரேல், டீசல் விலை அதிகம் உயர்ந்துள்ளது. கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. மகளீர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. தேர்தல் காரணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வாரத்தில் 3 நாட்கள் வருகிறார். ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க ஒரு முறையாவது வந்தாரா? திரும்ப, திரும்ப வந்து தமிழகத்தில் கால் வைத்து விடாலாம் என்று அவரை  அழைத்து வருகின்றனர். அவருக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios