Asianet News TamilAsianet News Tamil

கொளுத்தும் வெயிலில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு; திருத்தணியில் சோகம்

திருத்தணி அருகே நெமிலி வாக்கு சாவடி மையத்தில் ஓட்டு அளிக்க வந்த 72 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு ஓட்டு சாவடி மையத்தில் பரபரப்பு.

A person who came to vote in Thiruthani fainted and died vel
Author
First Published Apr 19, 2024, 4:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட நெமிலி ஊராட்சியில் உள்ள வாக்கு சாவடி மையம்-269 இந்த வாக்கு சாவடியில் இதே கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது தந்தை கனகராஜ் வயது (வயது 72) என்பவரை வாக்களிப்பதற்காக அழைத்து வந்துள்ளார்.

என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை

அப்போது வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே வந்தவர் வாக்களிக்க செல்லும் பொழுது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு மயங்கி விழுந்த கனகராஜ் அழைத்துக்கொண்டு வந்துள்ளார். திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

வாக்கு சாவடி மையத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதே போல் திருத்தணி நகராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்யும் தேர்தல் பணியாளர் ஒருவர் இதே போல் மயங்கி விழுந்து திருத்தணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த தேர்தல் அலுவலர் ரத்த கொதிப்பு காரணமாக மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்னைக்கு ஒரு நாள் தான் தேர்தல்; நாளை நான் யாரென காட்டுரேன் - திமுக நிர்வாகியின் மிரட்டலால் போலீஸ் அச்சம்

இதே போன்று சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த இருவர் செயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வாக்காளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுது்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios