Asianet News TamilAsianet News Tamil

வாக்களிக்க விடாமல் தடுத்த 10 பேர்; காவல் துறையினர் அதிரடி காவல் நிலையத்தில் குவிந்த எக்னாபுரம் மக்களால் பரபரப்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிராம மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக எக்னாபுரம் மக்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளதால் பரபரப்பு.

A case has been registered against 10 people for allegedly preventing people from voting in Egnapuram area vel
Author
First Published Apr 22, 2024, 1:52 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் 12 கிராமங்களை உள்ளடக்கி 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நாள் முதல் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து 636 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

15 வயது சிறுவனை கொலைகாரனாக்கிய தந்தையின் குடி பழக்கம்; தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்

இந்நிலையில் 18வது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம்  கிராம மக்கள் வாக்குப்பதிவை முழுவதுமாக புறக்கனித்தனர். இதனால் 1375 வாக்குகள் கொண்ட அந்த வாக்கு சாவடியில் 12 வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் மக்களை வாக்களிக்க வலியுறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கு வருவாய் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொடநாடு கொலை வழக்கு.! குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை- சிபிசிஐடி ஷாக்

இதனால் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன். கதிரேசன். கணபதி. பலராமன். முனுசாமி. இளங்கோவன். கவாஸ்கர். சுதாகர். ஓம்பகவதி. விவேகானந்தன். ஆகிய பத்து பேர் மீது  வழக்கு பதிவு செய்து இன்று சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில்  நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கி உள்ளனர். அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 10 பேர் உள்பட கிராம மக்கள் தற்போது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் ஆஜராகியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios