Asianet News TamilAsianet News Tamil

மேஜை, நாற்காலிகளை உடைத்து மாணவர்கள் அட்டகாசம்.. வீடியோ வைரல்.. சரியான ஆப்பு வைத்த கல்வித்துறை..!

பள்ளி வகுப்பறையில் இருந்த மேஜைகள், நற்காலிகளை அப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சீருடையில் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

government school broke tables and chairs.. school students suspend
Author
First Published Mar 9, 2023, 10:45 AM IST

தருமபுரி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை சேதப்படுத்திய வீடியோ வைரலானதை அடுத்து மாணவ, மாணவிகள் 5 பேர் 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அண்மையில் செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. 

government school broke tables and chairs.. school students suspend

அப்போது, பள்ளி வகுப்பறையில் இருந்த மேஜைகள், நற்காலிகளை அப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சீருடையில் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பும்படி பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 

government school broke tables and chairs.. school students suspend

இதையும் படிங்க;- செய்முறை தேர்வுகள் நிறைவு; மேசை, நாற்காலிகளை உடைத்து வீடியோ வெளியிட்ட மாணவிகள்

இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து, வகுப்பறையில் மேஜைகள், நற்காலிகளை உடைத்த  மாணவ, மாணவிகள் 5 பேர் 5 நாள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் இருந்த இருக்கைகளை மாணவ, மாணவியர் உடைத்து சேதப்படுத்துவதை ஆசிரியர்கள் தடுக்காதது ஏன் என கல்வித்துறை விளக்கம் அளிக்க கோரியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios