Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் தாமரை.. மோடி தான் அடுத்த பிரதமர்.. ராகுல் காந்தி செய்த விதிமீறல்.. அடித்து ஆடும் அண்ணாமலை..

இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் என்று அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

Tn bjp president annamalai against speech about rahul gandhi at coimbatore-rag
Author
First Published Apr 16, 2024, 11:48 PM IST

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கி உள்ள கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம்  இன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாப்பம்பட்டி , அப்பநாயக்கன்பட்டி,  சுல்தான்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை, 2024 இல் உலகிற்கு மோடி தேவைப்படுகிறார். கோவையில் இருந்து தாமரையை பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைக்க வேண்டும். சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் அதிக அளவில் தேசியத்தின் பக்கம் உள்ளனர். மோடிக்கு மட்டுமே பிரதமர் நாற்காலியில் அமர தகுதி உள்ளது.

ராகுல் காந்தி வயநாடு உத்தர பிரதேசம் என சுற்றி வந்து கொண்டு இருக்கிறார். விளக்குகளை அனைத்து விட்டு 500 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள். தங்க சுரங்கத்தையே கொட்டினாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 500 முதல் 600 கோடி செலவு செய்ய இங்கு இரண்டு திராவிட கட்சிகளும் அமர்ந்து இருக்கிறார்கள். நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய 970 கோடி ரூபாய் பணத்தை மூன்று மாதத்துக்கு முன்பு கொண்டு வந்து உள்ளோம் என பேசினார். பின்னர் அய்யம்பாளையம் பகுதியில் உணவு இடைவேளையின் போது அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசியதாவது, “ஆனைமலை - நல்லாறு திட்டத்திற்கு பெரிய எதிர்ப்பு இல்லை, 1958 ல் போட்ட 2 ஒப்பந்தம், கேரள அரசு அவர்களின் ஒப்பந்தத்தில் நிறைவேற்றி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

திட்டத்திறற்கான வரைவு அறிக்கை தயார் செய்யவே 10,000 கோடி செலவாகும் என்பதால் பிரதமரை சந்தித்து, பா.ஜ.க வேட்பாளர்கள் நீலகிரி, திருப்பூரில் வென்றவுடன் உறுதியாக செயல்படுத்தப்படும்,  சூலூர் சுற்று வட்டார கிராமங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் வாழ முடியாது, நீர் நிலை வற்றி உள்ளது, நிலத் தடி நீர் 1000 அடிக்கு கீழ் உள்ளது, ஆனைமலை - நல்லாறு திட்டம் மட்டுமே தீர்வு, 100 நாட்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது என்பது போக்குவரத்து விதி மீறல், அண்ணாமலை என்றால் தி.மு.க வும், கோவை காவல்துறை கிளம்பி வருவார்கள்.  மூத்த அரசியல் தலைவர் ராகுல் காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தை சொல்கிறது, இதை தி.மு.க வினரும் ஸ்டாலினும் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், ராகுல்காந்தி ஒரு நியாயம்.

ராகுல்காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்தை நிலைநாட்டும் போது தான் சட்டத்தின் மீது மரியாதை வரும். ஸ்டாலினுக்கு தான் பயம் வந்து உள்ளது. ராகுல்காந்தி  வயநாட்டிற்கு செல்லும் போது கம்யூனிஸ்ட் எதிர்த்து உள்ளனர். எல்லைத் தாண்டி இங்கு வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் என்கின்றனர். இண்டி கூட்டணியின் நிலை. ஸ்டாலின் அவர் மீது நம்பிக்கை இல்லாததால், ராகுல்காந்தி அழைத்து வருகிறார். அண்ணாமலையை தோற்கடிக்க தி.மு.க வே இங்கு நின்றது. தோற்கடிக்க முடியாது என்பதால் ராகுல்காந்தியை அழைத்து வந்து உள்ளனர். கோவை மக்களின் அன்பு மோடிக்கு உள்ளது, 60% வாக்குகள் கிடைக்கும். அ.தி.மு.க தொண்டர்கள் வெளியே வந்து கிராமத்தில் அனைவரும் பா.ஜ.க வில் இணைந்து மோடியின் பக்கம் வந்து உள்ளனர்.

சூலூர், பல்லடம் பகுதிகளில் அ.தி.மு.க வை சேர்ந்த முக்கியமானவர்கள் பா.ஜ.க பக்கம் வந்து உள்ளனர். களத்தில் வேலை செய்கின்றனர். அ.தி.மு.க வின் நிலையை அவர்கள் ஏசியில் இருந்து வெளியே வந்து எட்டி பார்க்க வேண்டும். தேசிய தேர்தல், பிரதமருக்கான தேர்தல், பிரதமர் வேட்பாளர் இல்லாமல் ஓட்டி வருகின்றனர்., நாளை பிரச்சாரம் முடிய உள்ளது, களத்தில் பார்த்தால் அ.தி.மு.க வாக்கு வெளியே வந்து விட்டது. அ.தி.மு.க மாய உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். எடப்பாடி, மூத்த தலைவர்கள் 1980 களில் பா.ஜ.க வின் பலத்தை அனைத்து இடங்களிலும் பார்க்கலாம்., கூட்டணி தலைவர்கள் அவர்கள் வேட்பாளர்கள் போல் களத்தில் உள்ளனர். கட்சி முக்கியம் என்றாலும், பா.ஜ.க வின் வெற்றியை நடுநிலை வாக்குகள் தீர்மானிக்கிறது, அவர்கள் பா.ஜ.க பக்கம் செல்கின்றனர். ஜூன் 4 கள நிலவரம் பாருங்கள், பா.ஜ.க மிகப்பெரிய வெற்றிபெறும்.

தேங்காய் உற்பத்தி என்பது தமிழகம், கேரள, ஆந்திரா ஆகிய மாநிலங்கள். தி.மு.க தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் கொடுப்பதாக தெரிவித்தனர்., ஆனால் கொடுக்கவில்லை, மத்திய அரசு கொப்பரை தேங்காய் வாங்கி,  பாரத் தேங்காய் எண்ணெய் உருவாக்கி, நாங்களே ரேஷன் கடையில் கொடுக்க உள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் தி.மு.க தேர்தல் அறிக்கை நிறைவேற்றவில்லை என சொல்ல தயாராக இல்லை, நாங்கள் களத்திற்கு வந்து விட்டோம். தேங்காய் கொள்முதல் என்பது மாநில பிரச்னை.  மாநில அரசு செவி சாய்க்க போவதில்லை அதனால் பாரத் தேங்காய் திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் 2 இலக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி 10 ஐ தாண்டி, ஒவ்வொரு நாளும் எழுச்சியால் 39 நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் கட்சியில், கூட்டணியில் 25 இலக்கு வைத்து உள்ளோம்.  கோவையில் பா.ஜ.க நம்பிக்கையாக வெல்லும் என சொல்வது போல்  தமிழக அளவிலும் சாதகமாக வரும். சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும், கோவை மத்திய ரயில் நிலையம் உலகம் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும். வாரணாசி போல் கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். கோவையில் முதல்வரின் மருமகன் உட்கார்ந்து உள்ளார். நாளையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் உட்கார உள்ளார், தமிழகத்தின் புலனாய்வு பிரிவு இங்கு தான் உட்கார்ந்து உள்ளனர், கணக்கு இல்லாமல் செலவழிக்கின்றனர், தண்ணீர் இருக்கோ இல்லையோ பணத்தை தண்ணீர் மாதிரி செலவழிக்கின்றனர். பணம் பலத்தை வைத்து தி.மு.க வெற்றி பெற போவதாக நம்புகிறது, அதை உடைத்து நாங்கள் வெற்றி பெறுவோம். தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios