Asianet News TamilAsianet News Tamil

என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை

பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்காளர்களுக்கு ஓட்டுரிமை, அடையாள அட்டை இருந்தும் அவர்களது பெயர் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முறையான ப்ளாக் லெவல் ஆபீஸர்களை அரசு நியமிக்காததே இதற்குக் காரணம் என சூலூரில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

bjp candidate annamalai inspect polling centre at coimbatore vel
Author
First Published Apr 19, 2024, 3:36 PM IST

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இடம் வாக்கு உரிமை, அடையாள அட்டை இருந்தும் தனக்கு ஓட்டு இல்லை எனக் கூறுகிறார்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

இதனை அடுத்து உடனடியாக இது பற்றி கவனிக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் பொழுது எவ்வாறு பெயர் நீக்கப்பட்டது? ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் உள்ள நிலையில் நான்கு பேருக்கு ஓட்டு இருந்து ஒருவருக்கு மட்டும் எவ்வாறு நீக்கப்பட்டது. வாக்கு அளிக்கும் உரிமை இந்திய குடிமகனின் ஜனநாயக கடமை. அதை நிறைவேற்ற வரும் பொழுது சில அஜாக்கிரதியான அதிகாரிகளால் இவ்வாறு நிறைய பொது மக்களுடைய வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது. 

இன்னைக்கு ஒரு நாள் தான் தேர்தல்; நாளை நான் யாரென காட்டுரேன் - திமுக நிர்வாகியின் மிரட்டலால் போலீஸ் அச்சம்

இது முழுக்க முழுக்க வாக்கு பட்டியல் தயாரித்தவர்களின் தவறு. மேலும் அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து முறையாக வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் யாரோ ஒருவர் வீட்டில் அமர்ந்து கொண்டு அவர் கூறும் வாக்காளர்களை எல்லாம் நீக்கி உள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்க செய்வதாக உள்ளது என அண்ணாமலை அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள்; திடீரென வாக்குச்சாவடிக்கு எண்ட்ரி கொடுத்த எல்.முருகன் - கோவையில் பரபரப்பு

மேலும் தான் வெற்றி பெற்றவுடன் இந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவேன் என உறுதி அளித்து அந்த விடுபட்ட வாக்காளரை சமாதானம் படுத்தினார். மேலும் அங்குள்ள பொறுப்பாளரை அழைத்து இவருக்கு ஏன் விடுபட்டது என கவனிக்குமாறு கூறினார். முன்னதாக கரூரில் வாக்களித்துவிட்டு பல்லடம் வழியாக சூலூர் வந்து வாக்குப்பதிவை பார்வையிட்டு அங்கிருந்து கோவை நோக்கி புறப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios