எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! நொந்துபோன கணவர்! 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை! சென்னையில் பகீர்!

வேலைக்கு சென்ற இடத்தில் வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

Father committed suicide by killing 2 children in Chennai tvk

இரண்டு குழந்தைகளைக் கொலை செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மோகன்(40). இரும்பு வியாபாரி. இவரது மனைவி யமுனா(35). தனியார் பிரிண்டிங் பிரஸிலும் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு சாய் ஸ்வாதி (13), தேஜஸ் (5) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலைக்கு சென்ற இடத்தில் வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இதையும் படிங்க: தம்பியின் மாமியாரை மடக்கி உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலை விடாத அண்ணன்! இறுதியில் பயங்கரம்!

இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவரைப் பிரிந்து தனது பிள்ளைகளுடன் யமுனா தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, பலமுறை மோகனை சந்தித்த யமுனா இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என உறுதி அளித்ததும் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் சமாதானம் செய்து வைத்தனர். 

இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆனால் யமுனா மாறவில்லை. கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால் மிகுந்த மன உளைச்சலில் மோகன் இருந்து வந்துள்ளார். இன்று காலை யமுனா வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. எவ்வளவு தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

இதையும் படிங்க:  45 வயதான மாமியார் சித்ரா மீது மருமகனுக்கு இவ்வளவு வெறியா? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

அப்போது மகள் சாய் ஸ்வாதி மற்றும் தேஜஸ் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்ட படியே அழுது கதறினார். இந்த சம்பவம் தொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி ரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios