Asianet News TamilAsianet News Tamil

#BREAKING:விடாமல் துரத்தும் ரூ.4 கோடி விவகாரம்! பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்! ஐகோர்ட் அதிரடி

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Case against Nellai BJP candidate Nainar Nagendran.. Chennai High Court takes action tvk
Author
First Published Apr 18, 2024, 12:31 PM IST

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லை மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: அடேங்கப்பா! ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை! கல்லா கட்டிய தமிழக அரசு! எந்த மண்டலத்தில் அதிகம் தெரியுமா?

Case against Nellai BJP candidate Nainar Nagendran.. Chennai High Court takes action tvk

மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Case against Nellai BJP candidate Nainar Nagendran.. Chennai High Court takes action tvk

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த  புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க:  நள்ளிரவில் டீக்கடையில் பாஜகவினர் போட்ட பக்கா பிளான்.. சுத்துப்போட்ட தேர்தல் பறக்கும் படை! சிக்கிய பணம்!

மேலும் பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios