Asianet News TamilAsianet News Tamil

யு-17 உலகக் கோப்பை: 3-வது காலிறுதியில் ஈரானை தோற்கடித்தது ஸ்பெயின்….

U-17 World Cup Spain defeated Iran in the third quarter.
U-17 World Cup Spain defeated Iran in the third quarter.
Author
First Published Oct 23, 2017, 9:03 AM IST


பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது காலிறுதியில் ஈரானை தோற்கடித்து வெற்றிப் பெற்றது ஸ்பெயின் அணி.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கொச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. இதன் 3-வது காலிறுதியில் ஈரான் – ஸ்பெயின் அணிகள் மோதின.

இதில் 13-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அந்த அணி வீரர் அபெல் ருய்ஸ் அற்புதமாக கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப் படுத்தினார்.

இந்த நிலையில், ஈரானின் கோல் முயற்சிக்களுக்கு வாய்ப்பளிக்காமல் சிறப்பான தடுப்பாட்டத்தை ஆடியது ஸ்பெயின். ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஈரான் வீரர் கோல் போஸ்டை குறிவைத்து ஷாட் ஒன்றை அடிக்க, அது சற்று திசைமாறிச் சென்று ஏமாற்றம் அளித்தது. 

31-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை அந்த அணி கோலாக மாற்ற முயன்றார். ஆனால் அது கோல் போஸ்டை தாண்டிச் சென்றது.
இவ்வாறாக ஆட்டம் தொடர முதல் பாதியின் முடிவில் ஸ்பெயின் 1-0 என முன்னிலையில் இருந்தது.

பின்னர் தொடங்கிய ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்ஜியோ கோம்ஸ் அணிக்கான அடுத்த கோல் அடித்தார். இதனால் அந்த அணி 2-0 என முன்னிலை பெற, ஈரான் முதல் கோலுக்காக போராட வேண்டியிருந்தது.

அடுத்த 7 நிமிடங்களில் ஸ்பெயின் தனது கோல் எண்ணிக்கையை 3-ஆக அதிகரித்துக் கொண்டது. 67-வது நிமிடத்தில் அந்த அணியின் ஃபெரான் டோரஸ் அற்புதமாக கோலடித்தார். ஒரு பக்கமாகச் சென்ற ஆட்டத்தை சற்று திசை திருப்பும் வகையில் 69-வது நிமிடத்தில் ஈரான் வீரர் சயீது கரிமி ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் தடுப்பாட்டம் ஆட, ஈரான் அணியினரின் கோல் முயற்சிகள் பலனளிக்காமல் போக, இறுதியில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஸ்பெயின் தனது அரையிறுதியில் மாலியை சந்திக்கும் ஆட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios