Asianet News TamilAsianet News Tamil

சேப்பாக்கத்தில் உருவான துபே புயலால் சிஎஸ்கே கொட்டிய சிக்ஸர், பவுண்டரி மழை – ஜிடிக்கு 207 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 7ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்துள்ளது.

Chennai Super Kings scored 206 runs against Gujarat Titans in 7th IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk
Author
First Published Mar 26, 2024, 9:26 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர்.

ரூ.1.80 கோடிக்கு ஒர்த்தா? சேப்பாக்கத்தில் 6, 4, 4, 4, 6, 4, 6, 4, 4 நிரூபித்து காட்டிய ரச்சின் ரவீந்திரா!

இதில், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா ஒரு பவுலரையும் விட்டு வைக்கலாம் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். 6, 4, 4, 4, 6, 4, 6, 4, 4 என்று விளாசி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அஜின்க்யா ரஹானே 12 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து தன் பங்கிற்கு 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு தான் சேப்பாக்கத்தில் துபே புயல் உருவானது. களத்திற்கு வந்த முதல் 2 பந்திலேயே சிக்சர் மழை தான். ஸ்டேடியமே உற்சாக, கரகோஷ மழையில் நனைந்தது. தனது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசிய சாய் கிஷோர், துபேவிற்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 22 பந்துகளில் 51 ரன்கள் கடந்தார். ஆனால், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

லட்டு மாதிரி ருதுராஜ் கெய்க்வாட் கையிலயே கொடுத்த கேட்ச் – கோட்டைவிட்ட தமிழக வீரர் சாய் கிஷோர்!

இவரைத் தொடர்ந்து வந்த அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி தனது முதல் ஐபிஎல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். மேலும், ஒரு சிக்சர் உள்பட 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக விளையாடிய டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசில வந்த ஜடேஜா 7 ரன்கள் எடுத்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரஷீத் கான் 2 விக்கெட் கைப்பற்றினார். மோகித் சர்மா, சாய் கிஷோர் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ரசிகர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும்!

Follow Us:
Download App:
  • android
  • ios