Asianet News TamilAsianet News Tamil

ரசிகர்களை ஏமாற்ற தோனிக்கு முன் பேட்டிங் செய்ய வந்த ரவீந்திர ஜடேஜா – வைரலாகும் வீடியோ!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 22ஆவது லீக் போட்டியின் போது ரசிகர்களை ஏமாற்ற தோனிக்கு முன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்து திரும்ப டிரெஸிங் ரூமிற்கு சென்ற வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

A video of Ravindra Jadeja coming back to bat before MS Dhoni to deceive the fans is going viral during CSK vs KKR Match at Chepauk rsk
Author
First Published Apr 9, 2024, 10:49 AM IST

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 வெற்றி, 2 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஷிவம் துபே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். துபே 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கேயின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையிருந்தது. அடுத்து ரஹானே, ஜடேஜா, ரிஸ்வி என்று வரிசையாக வீரர்கள் இருந்த நிலையில், யார் வருவார் என்ற கேள்வி இருந்தது.

 

 

அப்போது, ரவீந்திர ஜடேஜா டிரெஸிங் ரூமிலிருந்து களமிறங்குவதற்கு தயாராக வந்தார். அவர் வருவதைப் பார்த்து அவர் தான் பேட்டிங் செய்ய போகிறார் என்று நினைத்தனர். ஆனால், அவர் வந்ததுமே அப்படியே திரும்ப சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் எம்.எஸ். தோனி களமிறங்கினர். ரசிகர்களை ஏமாற்றவே ஜடேஜா அப்படி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனி 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வின்னிங் ஷாட் அடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்தப் போட்டியில் ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் அரைசதம் அடித்தார். அவர் 58 பந்துகளில் 9 பவுண்டரி, 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக சிஎஸ்கே 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios