Asianet News TamilAsianet News Tamil

தைரியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மோதிப்பார்..!! எடப்பாடியை வம்பிழுத்த திருமாவளவன்...!!

இந்த வெற்றி அடுத்து வரும் பொதுத்தேர்தலுக்கான  முன்னோட்டமாக அமையாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தாகும். இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்ததுதான் காரணம் என பாஜக வினர் கூறுவது மிகச்சிறந்த நகைச்சுவை என்றே சொல்ல வேண்டும்

vck leader thirumavalavan attack aiadmk victory and challenging for local body election
Author
Chennai, First Published Oct 25, 2019, 12:10 AM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி பெற்ற வெற்றி  ஆதரவு அலையால் பெற்ற வெற்றி அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் இது குறித்து தெரிவித்துள்ள அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிகளான அதிமுக - பாஜக பெற்றுள்ள வெற்றி மக்கள் ஆதரவு அலையால் கிட்டியது என்று பொருள் அல்ல. வழக்கமாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கையாளும் அனைத்துவகை வரம்புமீறல் தந்திரமே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரம்புமீறல்கள் யாவும் என்னவென்பது நாட்டுமக்கள் அறிந்ததே ஆகும்.

vck leader thirumavalavan attack aiadmk victory and challenging for local body election
 
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது என்பது வழக்கமானதாக இருக்கிறது. அந்த வெற்றியை ஈட்டுவதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களைப் பற்றி தேர்தல் ஆணையமே பலமுறை குறிப்பிட்டுக் கவலை தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அதே விதமான தந்திரங்களைக் கையாண்டுதான் தற்போது இடைத்தேர்தல் வெற்றிகளை ஆளும் கட்சி பறித்துள்ளது. எனவே, இதை பாஜக - அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு திரும்பிவிட்டது என எடுத்துக்கொள்ள முடியாது.

vck leader thirumavalavan attack aiadmk victory and challenging for local body election
 
இந்த வரம்புமீறல்களையெல்லாம் தாண்டி மக்கள் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வாக்குகளை அளித்துள்ளனர். மேலும், இந்த வெற்றி அடுத்து வரும் பொதுத்தேர்தலுக்கான  முன்னோட்டமாக அமையாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தாகும். இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்ததுதான் காரணம் என பாஜக வினர் கூறுவது மிகச்சிறந்த நகைச்சுவை என்றே சொல்ல வேண்டும்.  உண்மையிலேயே மக்கள் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என ஆளும் கட்சியினர் நம்பினால் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கு உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோருவது ஏன் ? அவர்களுக்கு இந்த தேர்தல் வெற்றி எப்படி கிட்டியது என்பது நன்றாக தெரியும். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதற்கு ஆளுங்கட்சியினர் தயங்குகின்றனர்.
 
 

Follow Us:
Download App:
  • android
  • ios