Asianet News TamilAsianet News Tamil

மக்களை பட்டினி போட்டு ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்திருக்கிறார்கள்... டிடிவி தினகரன் பாய்ச்சல்!

’மாற்றுத்துணிக்கு வழியில்லாமல், சரியான உணவு கிடைக்காமல் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள் ஆடு, மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று முதல்வர் எடப்பாடியையும் மற்ற அமைச்சர்களையும் கடுமையாக விமசிக்கிறார் டி.டி.வி. தினகரன்.

ttv dinakaran attacks ministers on flood relief works
Author
Tanjore, First Published Nov 20, 2018, 1:44 PM IST

’மாற்றுத்துணிக்கு வழியில்லாமல், சரியான உணவு கிடைக்காமல் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள் ஆடு, மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று முதல்வர் எடப்பாடியையும் மற்ற அமைச்சர்களையும் கடுமையாக விமசிக்கிறார் டி.டி.வி. தினகரன்.ttv dinakaran attacks ministers on flood relief works

இன்று முதல்வர் எடப்பாடி தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட நிலையில் நிருபர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ‘இங்கேயே தங்கியிருந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய ஒரு முதல்வர் 20 நிமிடங்களில்  சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்புகிறார். மக்கள் இங்கே ஒரு நிவாரண உதவியுமின்றி தத்தளிக்கிறார்கள்.

முறையாக நிவாரணம் சென்று சேராத காரணத்தால் கோபமாக இருக்கும் மக்களை சந்திக்க அமைச்சர்கள்தான் பயப்படுகிறார்கள் என்றால் அதிகாரிகளாவது போய் உதவ வேண்டுமா? நான் இதுவரை சுற்றி வந்த பகுதிகளில் ஒரு அதிகாரியைக் கூட சந்திக்கவில்லை. விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்கு உதவ ஒரு டாக்டர் கூட இல்லை.ttv dinakaran attacks ministers on flood relief works

உணவுத்துறை அமைச்சர் இங்கேதான் இருக்கிறார். ஆனால் மக்கள் சாப்பாட்டுக்கு நாதியின்றி நடுரோட்டில் நிற்கிறார்கள். கைத்தறித்துறை அமைச்சர், அதுவும் இதே தொகுதியைச் சேர்ந்தவர் இங்கேதான் இருக்கிறார். ஆனால் மக்கள் மாற்றுத்துணிக்கு வழியின்றித் தவிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயத்துறை அமைச்சரும் இங்கே இருக்கிறார். ஆனால் 90 சதவிகித தென்னை மரங்களை பறிகொடுத்த விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லக்கூட போகக்காணோம். மொத்தத்தில் மக்களைப் பட்டினி போட்டுக் கொல்கிறார்கள்’ என்கிறார் தினகரன்.

Follow Us:
Download App:
  • android
  • ios