Asianet News TamilAsianet News Tamil

’டி.டி.வி இப்படி நடத்தினால்கூட திமுகவில் இணைவேன்...’ தங்க.தமிழ்ச்செல்வன் அதிரடி..!

கரூர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஆண்டிபட்டி தங்க.தமிழ்செல்வன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகின்றன. இந்நிலையில் திமுகவில் இணைவது குறித்து அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் தங்க தமிழ்செல்வன். 

ttv dhinakaran join the DMK ..? thangaThamizhalvelvan says
Author
Tamil Nadu, First Published Feb 2, 2019, 4:39 PM IST

கரூர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஆண்டிபட்டி தங்க.தமிழ்செல்வன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகின்றன. இந்நிலையில் திமுகவில் இணைவது குறித்து அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் தங்க தமிழ்செல்வன். ttv dhinakaran join the DMK ..? thangaThamizhalvelvan says

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘’தேர்தல் வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. எங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வேலைகளில் எப்போதும் மிக பக்குவமாக செயல்படவேண்டும்.ttv dhinakaran join the DMK ..? thangaThamizhalvelvan says

ஜெயலலிதாவின் வழி அவருடன் முடிந்துவிட்டது. தற்போது தேர்தலுக்கு முன், கட்சிகளுடன் கூட்டணி பேசி பக்குவமாக இணைந்து சென்றால்தான் தேர்தலில் வெல்ல முடியும். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் பாஜகவின் வேட்பாளர்கள் வெற்றிபெறும் நிலையில் இருந்ததால் நாங்கள் ஆதரவு கொடுத்தோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் பெரும்பான்மையில் இருந்தாலும் அமமுக ஆதரவு தராது.ttv dhinakaran join the DMK ..? thangaThamizhalvelvan says

நான் திமுகவில் இணைவதாக சொல்லப்படுவது அனைத்தும் சமூக ஊடங்கங்கள், பத்திரிகைகள் பரப்பும் வதந்தி. நான் எப்போதும் அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவன். இரட்டை இலை சின்னத்தை பெறுவதுதான் எங்களது இலக்கு. அமமுக ஆட்சி அமைந்து டி.டி.வி.தினகரன் முதலமைச்சராகி அப்போது அவர் எனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என மறுத்தால் கூட நான் அதிருப்தியில் இருக்கிறேன். அதனால், திமுகவில் இணைவதாக வரும் தகவல்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அப்படியொரு நிலை அமமுகவில் இல்லை. ஆகையால், திமுகவில் சேரும் எண்ணம் எனக்கில்லை’’ என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios