Asianet News TamilAsianet News Tamil

ஒரே வார்த்தையில் திமுக அறிக்கையை தெறிக்கவிட்ட தமிழிசை..! அட என்னடா இது... புது மேட்டரா இருக்கே..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது எந்த  கட்சி என்னென்ன  தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

tamilisai spoke about dmk election agenda
Author
Chennai, First Published Mar 19, 2019, 1:42 PM IST

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது எந்த கட்சி என்னென்ன தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று, திமுக தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது...
அதன் படி, 

மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்,தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழ் மொழியில் செயல்பட நடவடிக்கை,வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

tamilisai spoke about dmk election agenda

தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்,கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும், சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய திட்டம் தொடங்கப்படும்   என  போல திட்டங்களை பற்றி திமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

tamilisai spoke about dmk election agenda

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை..!

இவர்கள் என்னமோ வித்தியாசமா, பல புது அறிவிப்புகளை பற்றி சொல்கிற மாதிரி அறிக்கை விட்டு இருக்காங்க.. ஆனால், பா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை தான் அவர்கள் சற்று ஜோடித்து அறிக்கையாக சொல்கிறார்கள் என்றுள்ளார்.

tamilisai spoke about dmk election agenda

திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்ற கருத்து ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அறிக்கை குறித்து இதெல்லாம் நாங்க ஏற்கனவே நடை முறை படுத்தி வரும் திட்டங்கள் என  ஒரே போடாய் போட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios