Asianet News TamilAsianet News Tamil

தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்துட்டாங்க- பிரேமலதா

பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொல்கிறீர்கள், தாலிக்கு தங்கம் அனைத்து பெண்களின் ஆசை, ஏன் தங்கத்தின் விலை குறைக்கிறேன் என்று சொல்லுங்களேன் என திமுகவிற்கு பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Premalatha has said that the AIADMK-DMDK alliance will continue in the Assembly elections as well KAK
Author
First Published Mar 25, 2024, 6:55 AM IST

விஜயகாந்த் மறைவு-முதல் நிகழ்சி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், இது ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் என்று தான் சொன்னார்கள், ஆனால் இது மாபெரும் வெற்றி மாநாடு என்கிற அளவில் உள்ளது.

திருச்சி என்றாலே திருப்பு முனையை ஏற்படுத்தும் இடம்,  இதே திருச்சியில் மகளிர் மாநாடு நடத்திய போது மலைக்கோட்டை மஞ்சள் கோட்டையாக தே.மு.க.திவினர் மாற்றி இருந்தனர். நான் கேப்டன் மறைவிற்கு பிறகு பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி. புரட்சி தலைவர் - புரட்சி தலைவி - புரட்சி கலைஞர் மூன்று பேரும் திரைத்துறையில் இருந்து மக்களுக்குகாக சேவை செய்ய வந்தவர்கள்.

Premalatha has said that the AIADMK-DMDK alliance will continue in the Assembly elections as well KAK

சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ரவுடிசியத்தை உருவாக்கி நாட்டிற்கு தலை குனிவை ஏற்படுத்தி வருகிறது. 2021ல் எடப்பாடி அண்ணன் வெற்றி பெற்று இருந்தால் தமிழகம் சிறப்பாக இருந்து இருக்கும். மீண்டும் சட்ட பேரவை தேர்தலில் அதிமுக - தே.மு.தி.க  2026ல் வெற்றி பெறும்.  திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை, டாஸ் மார்க் விற்பனை அதிகரித்துள்ளது.  திமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் கஞ்சா கடத்தும் ரவுடிகள், யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை என்கிற கதை தான் ஸ்டாலின் கதை.

எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் திமுக, குறை சொல்லும் திமுக, ராஜினாமா செய்து விட்டு மத்திய அரசிடம் கொடுத்து விடுங்கள். முதலில் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் என்று சொன்னார் - ஆனால் இப்போது தகுதி வாய்ந்த பெண்கள் என்கிறார். 1 லட்சம் சேர வேண்டிய பெண்களுக்கு வருடம் 12 ஆயிரம் தான் கிடைக்கிறது, மீதி 88 அயிரம் திமுக கஜனாவிற்கு  சென்று விட்டது. 

Premalatha has said that the AIADMK-DMDK alliance will continue in the Assembly elections as well KAK

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது

பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொல்கிறீர்கள், தாலிக்கு தங்கம் அனைத்து பெண்களின் ஆசை, ஏன் தங்கத்தை குறைக்கிறேன் என்று சொல்லுங்களேன் பாருங்கள். நன்கொடை என்கிற பெயரில் 662 கோடி இலவசமாக பெற்ற திமுகவை கண்டிக்கின்றோம், இது ஒரு விஞ்ஞான மறைமுக ஊழல்,  இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்றவர்கள் பா.ஜ.க, தமிழகத்தில் அதிகம் நன்கொடை பெற்றவர்கள் திமுகவினர்.

தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும். இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தேமுதிக அப்படி இல்லை, துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது என ஆவசேமாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தூத்துக்குடி மட்டுமில்லை என் தொகுதி... தமிழகம் முழுவதும் என் தொகுதி தான்.. பிரச்சார களத்தில் இறங்கிய கனிமொழி

Follow Us:
Download App:
  • android
  • ios